Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Rope in LTTE to stop ISI threat: Thackeray
#4
தாத்ஸ் தந்த இணைப்பு தமிழில் புதினம் தளத்திலிருந்து

மும்பை குண்டு வெடிப்பு குறித்து சிவசேனா தலைவர் பால்தாக்கரே பந்த்ராவில் உள்ள தன் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தீவிரவாதத்தை ஒழிக்க அவர் ஆவேசத்துடன் பரபரப்பான பல கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் இன்னமும் எல்லை தாண்டும் தீவிரவாதத்தை கைவிடவில்லை. பாகிஸ்தானுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டுமானால், நாமும் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை பாகிஸ்தானுக்குள் அனுப்ப வேண்டும்.

பாகிஸ்தானின் ஐ. எஸ். ஐ. சதி வேலைகளை முறியடிப்பது அவசியமான ஒன்றாகும். இதை இந்தியா உடனே செய்ய வேண்டும்.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை ஒடுக்க நாம் விடுதலைப்புலிகளை பயன்படுத்தலாம். இதற்காக அவர்கள் மீதுள்ள தடையை மத்திய அரசு விலக்க வேண்டும்.

சமீபத்தில் நான் துணை பிரதமர் அத்வானியை சந்தித்து பேசிய போது கூட, விடுதலைப்புலிகள் உதவியை இந்தியா நாட வேண்டும் என்று தெரிவித்தேன். தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் அளவுக்கு விடுதலைப்புகளிடம் போதுமான பயிற்சியும், மனித ஆற்றல்களும் உள்ளன.

டெல்லி - லாகூர் பஸ் போக்குவரத்தை உடனே நிறுத்த வேண்டும். அதில் யார் - யார் வருகிறார்கள் என்று யார் கண்டது?

பயணிகள் போர்வையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த பஸ் மூலம் இந்தியாவுக்குள் நுழைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே அதிகாரிகள் இந்த விஷயத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

தீவிரவாத விஷயத்தில் பாகிஸ்தான் நயவஞ்சகத்துடன் நடந்து கொள்வதால் நாம் ஏமாந்து விடக்கூடாது. குண்டுக்கு குண்டு என்ற அதிரடியான பதிலடி கொள்கையை நாம் கடைபிடிக்க வேண்டும்.

லண்டனில் உள்ள முஸ்லிம்கள் வாலாட்டிய போது, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் இல்லையெனில் எல்லா முஸ்லிம்களும் வெளியேற்றப்படுவீர்கள் என்று அப்போது பிரதமராக இருந்த தாட்சர் நடவடிக்கை எடுத்தார். அவரைப் போல ஒரு துணிச்சலான தலைவர் இந்தியாவுக்கு தேவை. துணை முதல்-மந்திரி புஜ்பாலின் உள்துறையில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. அவரது குறுக்கீடுகள் காரணமாக திறமையான பல உயர் அதிகாரிகள் சரியாக வேலை பார்க்க முடிவதில்லை.

மராட்டியத்தில் பிடிபடும் தீவிரவாதிகள் லஞ்சம் கொடுத்து விட்டு வெளியில் வந்து விடுகின்றனர். எனவே ரவுடிகளை சுட்டுக் கொல்வது போல பிடிபடும் தீவிரவாதிகளையும் 'என்கவுண்டர்" நடத்தி சுட்டுக்கொன்று விட வேண்டும்.

தீவிரவாதிகளை ஒடுக்க, மராட்டியத்தில் பல திறமை யான போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால் அவர்கள் நன்றாக செயல்படுவார்கள்.

தீவிரவாதிகளை அடக்க முடியாதவர்கள் ஆட்சியில் இருக்க கொஞ்சம் கூட உரிமை இல்லை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மராட்டிய போலீஸ் துறையை சீரமைப்போம்.

மும்பை நகருக்குள் எந்த ஒரு தீவிரவாதியும் வாலாட்ட முடியாதபடி நடவடிக்கை எடுப்போம். பஞ்சாப்பில் கே. பி. எஸ். கில் தீவிரவாதி களை ஒழித்தது போல இங்கும் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவோம்.

இவ்வாறு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூறினார்.
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 08-28-2003, 12:04 AM
[No subject] - by Mathivathanan - 08-28-2003, 12:23 AM
[No subject] - by Kanani - 08-29-2003, 02:20 PM
[No subject] - by Mathivathanan - 08-29-2003, 02:27 PM
[No subject] - by Mathivathanan - 08-29-2003, 02:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)