03-04-2005, 10:10 AM
ஜனாதிபதி ஆணைக்குழுக்களால் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பது வெறும் கானல் நீர் ஈழவேந்தன் எம்.பி. காட்டமான அறிக்கை
ஜனாதிபதி அமைக்கும் ஆணைக்குழுக்க ளால் தமிழ்மக்களுக்கு நியாயம் கிடைப்பது என்பது கண்துடைப்பு மட்டுமல்ல வெறும் கானல் நீர் போன்றது. - இவ்வாறு அறிக்கை ஒன்றில் தெரிவித்தி ருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க. ஈழ வேந்தன்
கிழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் கள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் தொடர் பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனா திபதி நியமித்திருக்கும் ஆணைக்குழு தொடர் பாகவே ஈழவேந்தன் இந்த அறிக்கையை விடுத் திருக்கின்றார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரி வித்ததற்கமைய ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பே. ஆனால் எம்மைப் பொறுத் தவரையில் ஜனாதிபதி அமைத்துள்ள ஆணைக் குழு கண்துடைப்பு மட்டுமல்ல வெறும் கானல் நீராகவும் விளங்குகின்றது.
ஈழத்தமிழ் மக்களுக்கு அரசினால் அநியா யங்கள் நடைபெறுகின்றதை எதிர்த்து நாம் குரலெழுப்புகின்ற போது காலப்போக்கில் அப் பிரச்சினையை நாம் மறக்கச் செய்கின்ற முறை யில் அரசு ஆணைக்குழுக்களை அமைப்பது வழக்கம். செல்வி கிரு~hந்தி குமாரசாமியை பாலி யல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வெறிகொண்ட சிங்கள இராணுவம் அவளையும் அவளின் தாயையும் தம்பியையும்ää துணைக்கு வந்த பக்கத்து வீட்டு இளைஞனையும் சாகடித்த போது தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்கு வதற்கு சந்திரிகா கையாண்ட தந்திரம் ஆணைக் குழு அமைத்ததேயாகும். ஆண்டுகள் உருண் டோடிய நிலையிலும் கிரு~hந்திக்கு ஏற்பட்ட கொடிய நிகழ்வையொட்டியும் அவளும் அவள் சார்ந்த உறவினரும் சாகடிக்கப்பட்ட நிலையிலும் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு என்ன முடிவை எடுத்தது? நீதிமன்றம் என்ன தீர்ப்பினை வழங்கியது?
1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழா ராட்சி மாநாட்டில் ஒன்பது தமிழ் உயிர்கள் மாய்க் கப்பட்டன. மக்களிடையே கிளர்ச்சி எழுந்த போது ஆட்சியில் இருந்த சந்திரிகாவின் தாயார் சிறிமாவும் சன்சோனி விசாரணைக் குழுவை நியமித்தார். ஆனால் நடந்தது என்ன?
நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத் தும் உருப்படியாக எத்தகைய ஆய்வையும் நடத்தவில்லை. மாறாக தூங்கி வழிந்தன.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எத்தகைய ஆக்க பூர்வமான தீர்ப்பினை ஆணைக் குழுக்கள் வழங்கியுள்ளன? இன்று போர் நிறுத்த ஆணைக்குழுவும் விழிப்போடு எதனை யும் செய்யமுடியாது தத்தளிக்கின்ற காட்சியை நாம் காண்கின்றோம். எனவே தான் கிழக்கு மாகாண அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் அவரோடு செயற்பட்ட போராளி களையும் சாகடிப்பதற்கு காரணமாய் இருந்த சந்திரிகா அரசு இப்பொழுது மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனியையும் மற்றும் அவரோடு இணைத்து அகநிலா சசிமதி ஆகி யோரையும் துப்பாக்கிச் சூட்டினால் சாகடிக்க முனைந்து தோல்வி கண்ட நிலையில் தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைத் திசை திருப்புகின்ற முறையில் ஆணைக்குழு அமைக் கப்போவதாக குடியரசுத் தலைவர் கூறும் கூற்று அவரின் குதர்க்க வாதத்தை எடுத்துக் காட்டு கின்றது.
சிங்கள அரசு குள்ளநரிக் கூட்டமாக விளங்கி எமை ஏமாற்ற முயலலாம். ஆனால்ää தொடர்ந்து ஏமாற்றுவதற்கு நாம் கருங்காகங்களுமல்ல ஏமாளிக் கூட்டமுமல்ல. - இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது
Uthayan

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>