Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்மதன் விமரிசனத்தில் விசம்........
#12
<b>கறுப்பியிடம் காத்திரமா படைப்பு?</b>
கறுப்பி (சுமதிரூபன்)அவர்களின் இணைய பக்கத்தில் மன்மதராசா என்ற பதிவில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களாகிய நாம் இப்போது வாழும் எமது எதிர்காலச் சந்ததிக்காக முக்கியமாக சிந்திக்க வேண்டியது என்னவெனின் பகைவரை அழிப்போம், துப்பாக்கி
து}க்குவோம், எதிரிகளை வெட்டுவோம், கொத்துவோம் போன்ற எமது ஈழத்துப் போராட்டப் பாடல்களை தடைசெய்ய முயற்சித்தல் வேண்டும். என்றும் பெற்றோரும் தமிழ் ஆசிரியர்களும் துவக்குத் து}க்கு என்று கூறுவது சிறுவர்களைக் குழப்பத்திற்கு ஆளாக்கும். சிறுவர்கள் பாடி ஆட அழகிய ஈழத்துப் பாடல்கள் நிறம்பவே இருக்கின்றனவே. எமது நாடு பற்றிய ஏக்கம். போராட்டத்தால் ஏற்பட்ட உளவியல் தாக்கங்கள். எமது மொழி எப்படி அழிக்கப்டுகின்றது இன்னும் நல்ல முறையில் சொல்லப்பட்ட எழுச்சிப் பாடல்கள் இருக்கின்றன, அவைகள் சரி மற்றவைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று எழுதி இருந்தார். ஆகவே அவர் கருத்துக் குறித்தும் அவர் போன்றோர் குறித்தும் சற்று எழுதலாம் என்று தோன்றியது

முதலில் அவருடைய பக்கத்திலேயே எழுதலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் ஏற்கனவே அது பின்னுட்டங்களால் அனகோண்டா அளவிற்கு நீண்டு விட்டதாலும் அங்கே வேறு ஏதோ தனிப்பட்ட பிரச்சனைகளை வம்பளந்து கொண்டு இருந்ததாலும் இங்கே பதியலாம் என்று வந்துவிட்டேன். வீரம் விடுதலை ஈழப்போராட்டம் என்ற சகலவற்றையும் தள்ளி வைத்துவிட்டு கொஞ்சம் பொதுவாக புலம்பெயர்ந்தோர் பிள்ளைகளின் வாழ்க்கை
நிலைபற்றிப் பார்ப்போம்.

இணையத்தளங்களில் நான் வலம் வருகிறபோது சிலவேளை எங்கள் வாலிபர்பளது புகைப்படங்களினைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளது. அதனைப் பார்த்து எங்களுடைய சமுதாயம் எங்கே போகிறது என்ற கவலை எனக்கு வரும். அதிலும் அதனைத் தவிர்க்க முடியாது என்றும் எனக்குத் தெரியும் (நாய் வேடம் போட்டால் குரைக்கத்தான் வேண்டும்). அதாவது வெளிநாடு வேண்டுமென்றால் வெளிக்கலாச்சாரமும் வரும். நூறு வீதமாக
எல்லோருக்கும் பொருந்தாவிட்டாலும் அதிமானோருக்கு பொருந்தும். இப்படி இருக்கிறபோது கறுப்பி (சுமதி ரூபன்) என்ன சொல்லுகிறார் (மன்மதராசா விமர்சனத்தில்) இங்கே (கனடா) டேற்றிங் போவது எல்லாம் சகஜம் என்பதால் மன்மதன் குழந்தைகளை அவ்வளவாகப் பாதிக்காது என்கிறார். உண்மைதான். மன்மதன் பாதிக்காது. பகைவரை அழிப்போம், துப்பாக்கி
து}க்குவோம், போன்ற பாடல் வன்முறையை வளர்க்கும் ஆகவே அதனைத் தடை செய்யவேண்டும். இது அவர் கருத்து. அப்படிப் பார்த்தால், மேற்குலகில் உள்ள அதிகமான பாடகர்கள் குண்டர்படையுடன் அலைபவர்கள். உதாரணத்திற்கு ஐம்பது சதம் (FIFTY CENTS)
இன்றுவரை உடலில் ஒன்பது துப்பாக்கிச் சுடுகள் வாங்கியபடி வலம் வருகிறார். இவரின் ஒரு நாள் பாதுகாப்புச் செலவு முப்பதாயிரம் டொலர். இப்படி இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்கள் வர்த்தகத்திற்காக செய்கிறார்கள். அதுவும் உண்மை. இவர்களுக்கு சமூகம் மீது அக்கறை கிடையாது. சரி. பெற்றோர்தான் இவற்றினைக் கவனிக்க வேண்டும். அதுவும் சரி.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளைக் "குழந்தைகள்" என்று கருதுவது எத்தனை வயதுவரை? 12, 13, அவ்வளவுதான். அதற்கும் அங்காலும் அவர்களைக் "குழந்தைகள்" என்று பெற்றோர்தான் கருதுவார்கள். பிள்ளைகள் பின்னர் இரண்டு வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள் வீட்டுடன் ஒன்று வெளி சமூகத்துடன் ஒன்று. இப்படி வாழ்வதற்குக் காரணம் எமது சமுக நடை முறைகளுக்கும் மேற்கத்திய சமூக நடைமுறைகளுக்கும் இடையில் வேறுபாடுகளே.
இப்படி இருக்கிறபோது இவர்களுக்கு இயல்பாகவே, இயல்பாக வாழும் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. இந்தக்கால கட்டங்களில்த்தான் இவர்கள் தடம் மாறிப்போகிறார்கள். அதாவது மேற்குலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்கள் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது இருப்பதால் அவர்கள் அதை மறைக்கிறார்கள். இப்படிப் மறைத்துப் பழகியவர்கள். பின்னர் ஏற்கனவே மறைத்துப் பழக்கப்பட்ட காரணத்தால், பின் தங்கள் ஆர்வம் சார்ந்த சகல
விடயங்களுக்கும் சாதாரணமாக எங்களை ஏமாற்றுகிறார்கள். ஆர்வம் சார்ந்த விடயம் என்று சொன்னேன் அல்லவா! அங்கேதான் சிக்கல் இருக்கிறது. எங்கள் நடை உடை பாவனைகளை விட மேற்கத்திய வாசனைகளே அவர்களுக்குப் பிடிக்கிறது. அதனால்த்தான் எங்கள் பிள்ளைகள் மேற்கத்திய பாடகர்களை பின்பற்றி அவர்கள் பின்பற்றுவதையும்
பின்பற்றுவார்கள் (பலருடைய அறைகளுக்குள் EMINEM விரலை நீட்டியபடி இருக்கும் படங்களினைப் பார்த்து இருக்கிறேன்).

இப்படி சிக்கல்கள் நிறைந்துபோய் இருக்கிற எம் புலம்பெயர் சமூகத்தில் துவக்குத் து}க்கு என்று சொல்கிற பாடலைக் கேட்டுத்தான் பிஞ்சுகள் கெட்டுப்போகப் போகிறார்களாம்.

ஐயோ... உங்களுடன் ஒரே நகைச்சுவையாக இருக்கிறது போங்கள்.

நான் என்ன சொல்லுகிறேன்!
இப்படிப் பாடலைக் கேட்டால் தான் நாங்கள் யாரென்கின்ற உணர்வு எங்களுக்கு வரும். இது சின்ன வயதில் இருந்து வந்தால் தான் பின்னர் தாமே முடிவெடுக்கும் பருவம் வந்ததும் தாமே தம் இனம், நாடு குறித்து ஒரு தீர்க்கமான முடிவு வரும். ஐந்தில் அறிவித்தால்
தான் ஐம்பதுவரை நிற்கும். நல்ல முறையில் சொல்லப்பட்ட எழுச்சிப் பாடல்கள் இருக்கின்றன என்று கறுப்பி (சுமதிரூபன்) சொல்கிறார். எழுச்சி என்றாலே அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெறும் உணர்வு தருவதுதானே! 'அழகான அந்தப்பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்" என்ற பாடல் எழுச்சிப்பாடல் அல்ல. அது சாதாரண பாடல்!

எடுகையில் வெடிகுண்டைப் புலியே நீ வாடா
அட இன்னும் சிங்களவன் கையில் உன் நாடா
உன் பாட்டன் உன் பூட்டன் ஆண்ட மண்ணன்றோ
இன்னொருவன் இதை ஆள நீ பணிதல் நன்றோ
என்னடா உனைப் பகைவன் நினைத்தானோ புழுவாய்
மண்ணதிர திசை எட்டும் விண்ணதிர எழுவாய்

இதுதான் எழுச்சிப்பாடல். இப்படிப்பாடல்கள்தான் பிள்ளைகளைக் கெடுக்கின்றன என்பது கறுப்பியின் (சுமதிரூபன்) வாதம். மிகவும் சிறிய குழந்தைகளுக்கு இவைகள் விளங்காது. ஒரளவு வளர்ந்த பிள்ளைகளுக்கு கொஞ்சம் அதிகம்தான் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் இந்தப்பாடல்களை சிறுவர்களுக்கு தெரியப்படுத்தாமல் விடுவோம்.
அதென்ன தடை செய்வது? அவர் யார்? அவர் பிள்ளைக்கு அவர் அதனைத் தெரியப்படுத்தாமல் விடட்டும். அப்படியே காளி (நாக்கினை வெளியே தள்ளி ஆவேசமாக ஆயுதத்துடன் நிற்பவர்) மற்றும் எங்கள் புராணக் கதைகள் போன்றவற்றை சொல்லிக் கொடுக்காமல் இருந்தார் என்றால் நல்லம். ஏனென்றால் அந்தக் கதைகளும் வன்முறையைத் தூண்டும் விசேடமாக தீபாவளிக்கெல்லாம் விளக்கம் சொல்லக்கூடாது.

ஆனால் ஆங்கிலப்பாடல்கள் எப்படி? ஒரு பாடலைப் பார்ப்போமா! மிகவும் பிரபல்யமான ஒருவரைப் பார்ப்போம். அவர்தான் திரு EMINEM ! இவரை அறியாத வட்டுகளே இல்லை அவருடைய Soldier என்ற பாடல் கீழே..

I'm a soldier...
......
[b]பாடல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது- ஹரி

இதற்கு அர்த்தம் வேறு எழுதவேண்டுமா! இந்தப்பாடலை பிள்ளைகள் கேட்காது என்று எண்ணாதீர்கள் இந்த இணையப் பக்கத்திற்கு பாடசாலையில் இருந்து பிள்ளைகள் இலகுவாகச் செல்லலாம். ( பெரும்பாலான பாடல் இணையப்பக்கத்திற்குத் தடை இல்லை)

இப்படியான சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிற எங்களுக்கு கறுப்பி (சுமதிரூபன்) சொல்வது போல பிரச்சனை இருந்தால்! எந்த அளவுக்கு அது எங்களைப் பாதிக்கும். வேறு ஒரு விதமாகப் பார்ப்போமே, மேற்சொன்னது போல எவ்வளவோ சிக்கல்கள் எங்களுக்கு இருக்கும்போது எழுச்சிப்பாடலினைத் தடைசெய்வதுதான் இப்போ முக்கியமா!

எனக்குச் சிலரைத் தெரியும்!
புலிகளுக்கு எதிராக இருப்பதனால் -அல்லது
சொந்த நாடு பற்றி அக்கறைப்படாமல், வாழும் பிரதேசத்தினை மட்டும் வைத்து சிந்திப்பதனால் -அல்லது
தம்மைச் சுற்றி ஒரு பரபரப்பினை ஏற்படுத்த முற்படுவதனால் -அல்லது
இன்னும் பெரிதாக, பெரும் புள்ளிகளுக்கு சும்மா எங்காவது இருந்து சவால் விடுவதனால்

தங்களின் பக்கம் எல்லோருடைய கவனமும் திருப்பப்பட வேண்டி இப்படி எழுதுவார்கள். என்னசெய்வது எல்லாவிதமான மனிதர்களும் எங்கள் மத்தியில் இருக்கிறார்கள்.

இப்படி சொந்த இனத்தில் அக்கறை இல்லாமல் மேற்கத்திய மோகத்தினை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரிடம் இருந்து எப்படி புலத்தில் வாழும் மக்களுக்கு ஏற்புடையதான ஒரு காத்திரமான படைப்பினைப் பெறுவது?

கறுப்பி (சுமதிரூபன்) என்னைப்பார்த்து YOU2 சொல்ல முடியாது.

(இத்தனைக்கும் நான் புலியும் அல்ல! புலி ஆதரவாளன் என்று சொல்லிக் கொள்பவனும் அல்ல! நான் எங்கள் தேசியத்தில் அக்கறையுடையவன் அவ்வளவுதான்)


நன்றி
எல்லாளன்
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 03-04-2005, 12:13 AM
[No subject] - by KULAKADDAN - 03-04-2005, 12:15 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 02:12 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 02:29 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 03:20 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 03:42 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 03:43 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 03:49 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 04:12 AM
[No subject] - by hari - 03-04-2005, 05:40 AM
[No subject] - by hari - 03-04-2005, 09:11 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 11:48 AM
[No subject] - by Niththila - 03-04-2005, 03:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)