08-28-2003, 09:13 PM
கனடா அரசாங்கம் புலிகளைத் தடைசெய்ய வேண்டும் எனக்கோரி இணையத்தளம் ஒன்றின் மூலமான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. சுமார் 8000 முக்கிய பிரமுகர்கள் இந்த மகஜரில் கையொப்பம் இட்டுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா ஆகியோரைப் படுகொலை செய்தும், தற்போதைய ஜனாதிபதி திருமதி. சந்திரிகாவை கொலைசெய்ய முயன்றதுமான பயங்கரவாத அமைப்பு புலிகள். இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளால் தடைவிதிக்கப்பட்டுள்ள புலிகள் கனடாவை தமது தளமாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது என்று இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

