Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண் போராளிகள் மீது தாக்குதல்
#35
அரசே பொறுப்பு!


அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஆயினும் தோல்வியில் முடிவடைந்தது என்பதற்காக இவற்றை ஓரம் தள்ளி விடவோ ஒதுக்கி விடவோ முடியாது.

ஏனெனில் அரசியலில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகளின் மீது மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்கள் யுத்த நிறுத்த உடன்பாட்டையே கேள்விக் குறியாக்கும் வகையில் பாரதூ}ரமான விளைவுகளுக்கு விரைவில் இட்டுச் செல்லக் கூடியவை.

ஏனெனில் சூழ்நிலை எப்பொழுதும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்றோää தொடர்ந்தும் பொறுமை கடைப்பிடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதோ மடமை.

மட்டக்களப்பில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்படப் போராளிகள் மற்றும் மாமனிதர் சந்திரநேரு போன்றவர்களின் படுகொலைகளின்; பின்பும் விடுதலைப்புலிகள் பொறுமையுடன் யுத்த நிறுத்தத்தைப் பேணி வருகின்றனர். அமைதி காக்கின்றனர் என்பதினால் அரசாங்கம் தப்புக் கணக்கு போட்டுள்ளது போலத் தெரிகின்றது. அதாவது புலிகள் பலவீனப்பட்டு விட்டார்கள் எனக் கருதுவது போல் உள்ளது.

இதன் வெளிப்பாடே மட்டு- அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனிää துணைப் பொறுப்பாளர் சசிமதி மற்றும் போராளி அகநிலா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இது அரசாங்கத்தின் தப்புக் கணக்கு என்பது மட்டுமல்ல. அரசாங்கமே இதற்கான விலையையும் கொடுக்க வேண்டிவரும் என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இப் படுகொலையைச் செய்தவர்கள் யார் என்ற கேள்விக்குப் பதில் தேடுகையில் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒரே ஒரு விடயம். இத் தாக்குதலை நடத்தியவரின் பெயர்ää விலாசம் என்பன மட்டுமே. இதற்கு அப்பால் எதுவுமே கண்டு பிடிக்கவோää தேடப்பட வேண்டியஅவசியமோ இல்லை.

ஏனெனில் இத் தாக்குதல்களுக்கு முழுப் பொறுப்பும் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கமே ஆகும். அரசாங்கம் இத்தகைய தாக்குதலுக்கு அங்கீகாரம் அளித்தால் போதும்ää செய்து முடிப்பவர்கள் எல்லாம் சிறிலங்காப் புலனாய்வுத் துறையினரும்ää இராணுவத் தரப்பினருமே ஆகும்.

அரச படைகளுடன் எந்தவொரு தமிழ்ஆயுதக் குழுவும் இணைந்து செயற்படவில்லை. எந்த ஆயுதக் குழுவிற்கும் அரசாங்கம் ஆயுதங்களை விநியோகம் செய்யவோää பாதுகாப்பு அளிக்கவோ இல்லையெனச் சனாதிபதி சந்திரிகாவோ அன்றி அவருடைய அரசாங்கத் தரப்போ கூறிக் கொள்ளலாம். ஆனால் உண்மை நிலை அவ்வாறானதாக இல்லை என்பதைப் பல நிகழ்வுகள் ஏற்கனவே நிருபித்துள்ளன.

தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்குவதென்பதும்ää அவர்களைப் பராமரித்து வருவதென்பதும்ää இதற்குப் பிரதியீடாக இவ் ஆயுதக் குழுக்கள் தமிழ்த் தேசியத்தைக் குலைக்கும்ஃபலவீனப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்படுவதும் நீடித்து வரும் நிகழ்வுகளாகும். இத்தகைய ஆயுதக் குழுக்களில் ஒரு பகுதியினர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து செயற்பட்டமை கூட கடந்த காலத்தில் வெளிவந்த விடயங்களாகும்.

ஆனால் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவோ துணைப்படை எதுவும் இல்லை. ஆயுதப் படைகளின் உதவியுடன் செயற்படும் ஆயுதக் குழுக்களும் இல்லை எனத் தெரிவிப்பது சிறுபிள்ளைத்தனமானது. சனாதிபதி சந்திரிகா பொய் கூறுவது புதிதல்லத்தான். ஆனால் உலகறிந்த உண்மையொன்றைத் தனது பொய்களால் மறைத்து விடலாம் என்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எண்ணுவது தான் மடமையாகும்.

இது தவிர இத்தகைய படுகொலைகள்ää படுகொலை முயற்சிகள் யாவும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே நடைபெற்றுள்ளன. இதன் காரணமாகப் இப் படுகொலைகளுக்கு இராணுவமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இதில் இராணுவம் ஈடுபடவில்லை என்றோää இராணுவத்திற்கு சம்பந்தம் இல்லை என்றோ மறுப்பதில் அர்த்தமில்லை.

ஆயுதக் குழுக்களோää துணைப்படைப் பிரிவுகளோ இராணுவத்துடன் இல்லையெனில் தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் இராணுவத்தினர் என்பதாகிவிடும். ஏனெனில் தாக்குதல்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் என்பது மாத்திரமல்ல ஆயுதப் படைத்தரப்பின் முகாம்களுக்கு அண்மையாகவும்ää இராணுவக் காவலரண்களுக்கு இடையிலும் நடைபெறுவதே வழமையாகியுள்ளது.

ஆகையினால் இத் தாக்குதல்களை இராணுவத்தினரின் பலத்துடன் இயங்கும் துணைப்படைக் குழுக்கள் அன்றி இராணுவத்தினரே மேற்; கொள்ளுதல் வேண்டும். இதில் யார் தாக்குதலை மேற்கொண்டாலும் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். அது மாத்திரமல்ல இத்தாக்குதலின் எதிர் விளைவுகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டையும் போதிப்பவர்களாகவும்ää அவர்களின் ஆதரவவைப் பெற்றுக் கொள்பவர்களாகவும் ஆட்சியாளர்களே உள்ளனர்.

நன்றி: ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 05:41 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 05:43 PM
[No subject] - by eelapirean - 02-28-2005, 06:04 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 06:50 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 06:54 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 06:58 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 07:02 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 07:05 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:07 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:09 PM
Senior LTTE political official shot - by AJeevan - 02-28-2005, 08:51 PM
[No subject] - by vasisutha - 02-28-2005, 11:47 PM
[No subject] - by வியாசன் - 03-01-2005, 11:52 AM
[No subject] - by Mathan - 03-01-2005, 02:25 PM
[No subject] - by Vaanampaadi - 03-01-2005, 09:06 PM
யார் இவர்? - by eelapirean - 03-02-2005, 04:15 PM
[No subject] - by MEERA - 03-03-2005, 02:42 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:50 PM
[No subject] - by tamilini - 03-03-2005, 06:31 PM
[No subject] - by eelapirean - 03-03-2005, 06:49 PM
[No subject] - by வியாசன் - 03-03-2005, 07:12 PM
[No subject] - by shiyam - 03-03-2005, 07:16 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 09:51 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:10 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)