Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண் போராளிகள் மீது தாக்குதல்
#30
குவேனியைச்சுட்டவர்; முன்னாள் இராணுவ உளவாளி: படை வட்டாரங்கள் தகவல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு. அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி உட்பட மூன்று பெண் போராளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் முன்னாள் இராணுவ உளவாளியாக செயற்பட்டதுடன் தற்போது கருணா குழுவில் இணைந்து செயற்படுவதாகவும் இராணுவ தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மேற்படி புலிகளின் போராளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த நபரின் உண்மையான பெயர் ஜோன்சன் ஜெயகாந்தன் என்றும் இவர் கடந்த காலங்களில் இராணுவத்தினருக்கு உளவுத்தகவல்களை வழங்கி பல்வேறு வகைகளில் செயற்பட்டார் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இது குறித்து இராணுவ வட்டாரங்கள் மேலும் தகவல் தருகையில்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன் வெளிநாடு ஒன்றில் சிறிதுகாலம் தங்கியிருந்து விட்டு கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கை திரும்பி கருணா குழுவில் இணைந்து கொண்டார்.

சம்பவ தினமான கடந்த திங்கட்கிழமை மாலை குவேனி குழுவினர் மீது தம்பிலுவில் பகுதியில் வைத்து இவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். அதேவேளை இவரை இனங்கண்டு கொண்ட விடுதலைப் புலிகள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

ஜெயகாந்தனோ புலிகளின் பிடியிலிருந்து ஒருவாறு தப்பி கல்முனை கார் மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நலன்புரி நிலையத்துக்குள் புகுந்து அங்கு கடமையிலிருந்த அதிரடிப்படையினரிடம் தன்னை கொலை செய்யும் பொருட்டு விடுதலைப்புலிகள் துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அங்கு வந்த புலிகள் உறுப்பினர்கள் இவரே குவேனி குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த நபர் எனவும் அதையறிந்து தாங்கள் பின் தொடர்ந்து வந்த வேளை இங்கு வந்து புகுந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கல்முனை மற்றும் திருக்கோவில் பொலிஸாருக்கு அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். பின்னர் அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் என தெரிவித்தனர்.

சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 05:41 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 05:43 PM
[No subject] - by eelapirean - 02-28-2005, 06:04 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 06:50 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 06:54 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 06:58 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 07:02 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 07:05 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:07 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:09 PM
Senior LTTE political official shot - by AJeevan - 02-28-2005, 08:51 PM
[No subject] - by vasisutha - 02-28-2005, 11:47 PM
[No subject] - by வியாசன் - 03-01-2005, 11:52 AM
[No subject] - by Mathan - 03-01-2005, 02:25 PM
[No subject] - by Vaanampaadi - 03-01-2005, 09:06 PM
யார் இவர்? - by eelapirean - 03-02-2005, 04:15 PM
[No subject] - by MEERA - 03-03-2005, 02:42 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:50 PM
குவேனியைச்சுட்டவர்; முன்னாள் இராணுவ உளவாளி - by வியாசன் - 03-03-2005, 06:08 PM
[No subject] - by tamilini - 03-03-2005, 06:31 PM
[No subject] - by eelapirean - 03-03-2005, 06:49 PM
[No subject] - by வியாசன் - 03-03-2005, 07:12 PM
[No subject] - by shiyam - 03-03-2005, 07:16 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 09:51 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:10 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)