Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடற்புலிகளின் தளபதி சூசையுடன் நான் பேசியதை ....
#1
கடற்புலிகளின் தளபதி சூசையுடன் நான் பேசியதை
ஹக்கீம் இகழ்வதானது அவரது அறியாமையையே காட்டுகின்றது
வன்னி மாவட்ட புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியுதீன்

தானே தலைவன் என்று பறைசாற்றிக்கொண்டு இருக்கும் ரவூப் ஹக்கீம், வடக்கில் கடலலையால் காவு கொண்ட மக்களுக்கு உதவி செய்ய நான் சென்ற வேளை, கடற் புலிகளின் தளபதி சூசையுடன் பேசியதை இகழ்ந்து பேசியிருப்பதானது, அவரது அறியாத்தன்மையை புலப்படுத்தியிருப்பதாக புனர்வாழ்வு, வன்னி மாவட்ட அபிவிருத்தி அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் சாளம்பைபுரம் கனிஷ்ட பாடசாலையில் திங்கட்கிழமை நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:

இந்த அரசாங்கத்தில் உள்ள அதிகாரங்களையும், பெருந்தொகையான பணத்தைப் பயன்படுத்தியும், எனது மாவட்டத்துக்கும், அங்கிருந்து இடம்பெயர்ந்தும், வாழ்கின்ற மக்களுக்கான அபிவிருத்திகளை செய்யவே இந்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டோம். ஆனால் கடந்த ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சியின் போது பல அமைச்சுக்களை தன் பைக்குள் வைத்திருந்த ரவூப் ஹக்கீம், வடக்கு மக்களுக்கு எதனை செய்திருக்கின்றார்?

பெருந்தலைவர் அஷ்ரப் தோற்றுவித்த இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்னும் விருட்சம் எமக்குத் தேவை, இது முஸ்லிம் சமூகத்தின் சொத்தாகும். ஆனால் இக்கட்சியினை தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காகவும், சுயநல அரசியல் லாபங்களுக்காகவும், தற்போதைய தலைமைத்துவம் செயற்பட்டுக் கொண்டிருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

வடக்கு, கிழக்கு முஸ்லிம்களது உயிர்களினதும், உடைமையினதும் இழப்புகளுக்கு மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட இக்கட்சியை ஒரு தனிமனிதனது ஆசா பாசங்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கு இந்த முஸ்லிம் சமூகம் ஒரு போதும் தயாரில்லை என்பதை உணர்த்தும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒரு தனித்துவமான கட்சி, இதனை ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ சேவகம் செய்கின்ற கட்சியாக மாற்ற எந்த தலைமைக்கும் எவரும் அனுமதியளிக்கவில்லை. எதேச்சாதிகாரமான பொறுப்பற்ற முறையில் செயலாற்றும் இந்த தலைமைத்துவம் முழு முஸ்லிம் சமூகத்தையும் படு குழியில் தள்ளும் நிலைக்கு மாறியுள்ளது. தானே முஸ்லிம் சமூகத்தின் ஏக தலைவன் என தம்பட்டமடிக்கும் ரவூப் ஹக்கீம், வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெற்ற துர்ப்பாக்கிய சம்பவங்களின் போதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை மீட்டிப் பார்க்கட்டும்.

ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களுடன் எமது மக்களின் உரிமை, தேவைகள், அபிவிருத்திகள் என்பவைகள் குறித்து பேரம் பேசி அவற்றை பெற்றுக் கொடுப்பதைவிடுத்து, எதையும் செய்து கொள்ள முடியாத எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து வேடிக்கை பார்ப்பதற்காகவா? எமது மக்கள் பாராளுமன்றம் அனுப்பினர். ஆனால் இவற்றுக்கெல்லாம் மாற்றமாக ஐக்கிய தேசியக் கட்சியில் மட்டும் ஒட்டிக்கொள்வோம். சந்திரிகாவின் ஆட்சியிலிருந்து விலகிக் கொள்வோம் என்று பேசுவதானது, தனது சுயநல அரசியல் செயற்பாட்டின் நிகழ்ச்சி நிரலையே காண்பித்துள்ளது.

இந்த போக்கு கண்டிக்கப்படக் கூடியதொன்று என்பதை புரியவைக்கும் வகையில், ஆளும் கட்சியுடன் நிபந்தனைகளுடன், மாற்றுக் குழுவாக இணைந்து செயற்பட வேண்டியேற்பட்டது. இதன்மூலம் மக்களுக்கான பணிகளை முன்னெடுக்க முனைகின்றபோது, பொறுப்பற்ற, விஷமத்தனமான பிரசாரங்களில் கட்சித் தலைமைத்துவம் இறங்கி செயற்படுகின்றது.

அதிகாரப் பலத்தை தான் வைத்துக்கொண்டிருப்பதாக கூறிக்கொள்ளும் ரவூப் ஹக்கீமினால் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வர முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனைவிடுத்து தமது குறைகளை மறைப்பதற்காக வேண்டி, ஏனையோர் மீது சோடிக்கப்பட்ட அபத்தமான அனர்த்த அரசியல் சாயத்தை பூசுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை கேட்கவிரும்புகின்றேன்.

எமது மக்களின் விடிவுக்காக உரிய நடவடிக்கையினை, தேவையான போது எடுக்க முற்படுகையில் எவ்வித சம்பந்தமுமில்லாமல் கருணாவை பார்ப்பது போன்று எம்மை நோக்குவதாக கூறியிருப்பதானது ரவூப் ஹக்கீம், பிரபாகரனின் அந்தஸ்தில் இருப்பதாக மனப்பால் குடித்துக் கொண்டிருப்பதாகவே நினைக்க வேண்டியுள்ளது.

Virakesari
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கடற்புலிகளின் தளபதி சூசையுடன் நான் பேசியதை .... - by Vaanampaadi - 03-03-2005, 01:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)