Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேவிபியும் ஹெல உறுமயவும் - இனவாதம்
#3
பௌத்த சிங்கள ஸ்ரீலங்காவை அழித்து தமிழ் கிறிஸ்தவ ஈழத்தை அமைக்க முயற்சி - சர்வதேச சமூகத்தை சாடுகிறார் வீரவன்ச

பௌத்த ஸ்ரீலங்கா இராஜ்யத்தை அழித்தொழித்து விட்டு தமிழ் கிறிஸ்தவ தமிழ் ஈழத்தை உருவாக்கும் நிகழ்ச்சி நிரலையே சர்வதேச நாடுகள் தற்போது இலங்கையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களோடு இணைந்து மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ஒரு போதும் எமது இராஜ்யத்தை பலவீனமடையும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடாதென்றும் தெரிவித்தார்.

கொழும்பு, விஹாரமகாதேவி திறந்த வெளியரங்கில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மார்ச் 2 ஆம் திகதியை "மீள் அடிமைத்தனத்திற்கு எதிரான தினமாகவும்" 2005 ஆம் ஆண்டையும் மேற்படி ஆண்டாக பிரகடனப் படுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றபோதே எம்.பி.யும் இவ்வியக்கத்தின் இணைத் தலைவருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி உடன்படிக்கை 1815 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுடன் கைச்சாத்திட்டபோது ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல தேரர் பிரிட்டிஷ் தேசியக் கொடியை கீழிறக்கி இலங்கை தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வை நினைவு கூருமுகமாகவே இத்தினம் மீள் அடிமைத்தனத்திற்கு எதிரான தினமாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ்ச்செல்வனும் மறந்த இடைக்கால நிர்வாக சபை யோசனை தமிழீழம் தொடர்பாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளே இங்கு வந்து வீடு திரும்பும் போது புலிகளுடன் பேசுமாறும் தேசிய இணக்கப்பாடுடன் செயற்படுமாறும் கூறிவிட்டுச் செல்கிறார்கள்.

இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்துவதில் சர்வதேச சமூகமும் டொலர்களுக்காக இங்கு செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்களுமே மேற்கொண்டு வருகின்றன.

உலக பயங்கரவாத பட்டியலில் உள்ள ராஜீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாத ஆயுதக் குழுவான புலிகளுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கத்தை தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டுமென சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுப்பது எவ்வாறு நியாயமாகும்.

இது போன்று அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷும்- பின்லேடனும் தேசிய இணக்கப்பாட்டுன் செயற்பட வேண்டுமென சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தால் அதை புஷ் ஏற்றுக் கொள்வாரா?

எமது இராஜ்யத்தை பலவீனப்படுத்தி அதனை சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதே சர்வதேச நாடுகளின் திட்டமாகும்.

கடல்கோளுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் இலங்கைக்குள் புகுந்திருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதோடு, பிரிவினைக்கான திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறதென்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இயக்கத்தின் இன்னுமொரு இணைத் தலைவர் தம்பர அமிலதேரர் உட்பட மத்திய குழு செயற்குழு உறுப்பினர்களும் பெருந்திரளான மக்களும் பௌத்த குருமாரும் கலந்து கொண்டனர்.

தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
தமிழ் கிறிஸ்தவ ஈழம் - by Mathan - 03-03-2005, 12:55 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:57 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)