03-03-2005, 10:16 AM
<b>நட்சத்திரங்கள் இல்லாத வான்மண்டலம்</b>
பிரபஞ்சத்தில் நட்சத்திர மண்டலம் என்றாலே அது ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டது என்றுதான் அர்த்தம். ஆனால் அதில் இப்போது ஒரு மாற்றம்.
நட்சத்திரங்களே இல்லாத ஒரு மண்டலத்தை இனம்கண்டிருக்கிறோம் என்கிறார்கள் வானியல் விஞ்ஞானிகள்.
அதாவது, நம்முடைய நட்சத்திர மண்டலமான பால்வீதியிலிருந்து ஒளியில் வேகத்தில் சென்றால் ஐம்பது வருடங்களில் இந்தப் புதிர்மண்டலத்தை நாம் அடைய முடியும்.
விண்ணில் கன்னிராசி உள்ள அதே பகுதியில் இருக்கிறது இந்த மண்டலம்.
இதில் காணப்படுவது என்ன - வெறும் ஹைட்ரஜன் வாயுதான்.
அதாவது சுமார் பத்துகோடி நட்சத்திரங்கள் உருவாவதற்குத் தேவையான வாயு இங்கே உள்ளது.
ஆனால், நட்சத்திர மண்டலம் என்பது என்னவோ உருவாகவே இல்லை. ஏன்? இதற்குப் பதில், இதே மண்டலத்தில் காணப்படும் ஒருவிதக் கருப்புப் பொருளில் இருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்தக் கருப்புப்பொருள், ஹைட்ரஜன் வாயுத்துகள்கள் ஒன்றிணைந்து நட்சத்திர மண்டலம் உருவாவதைத் தவிர்த்திருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
எனினும் இந்தப் புதிர் விடுபட மேலதிக ஆராய்ச்சி தேவை என்கிறார்கள் இவர்கள்.
<b>சூடுபிடிக்கும் செவ்வாய் விவாதம்</b>
பிரபஞ்சத்தை விடுத்து நம்முடைய சூரிய மண்டலத்துக்கு வந்தால் அங்கும் செவ்வாய்க்கிரகம் ஒரு பெரும் புதிராகத்தான் தெரிகிறது.
குறிப்பாக அங்கு உயிரினங்கள் ஒருகாலத்தில் இருந்திருக்குமா என்ற கேள்விக்குப் பதில் இன்னும் கிட்டிய பாடில்லை. அண்மையில் செவ்வாய்க்கிரகம் வரை சென்றிருக்கும் ஐரோப்பிய விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை ஆராய சென்ற வாரம் கூட, விஞ்ஞானிகள் கூடினார்கள்.
இவர்களில் ஒருவர் இத்தாலிய விஞ்ஞானி விட்டோரியோ போர்மிசானோ. செவ்வாய்க்கிரகத்தில் மீதேன் வாயு அதிகமாக முன்பு இருந்து அது பார்மால்டிஹைட் வாயுவாக மாறியிருக்கலாம் என்பது இவர் கருத்து.
இதை அடுத்து, செவ்வாய்க்கிரகம் பற்றிய விவாதம் சூடுபிடித்திருக்கின்றது.
அந்தப்புதிர் விடுபடும்போதுதான் பூமியில் உயிரினங்கள் தோன்றியது எப்படி என்ற புதிரும் விடுபடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
BBC News

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>