03-03-2005, 04:12 AM
<b>சிங்கள பத்திரிகையான லங்காதீபவில் இருந்து ,,,,,</b>
தீவிர புலனாய்வு நடவடிக்கைகளை செய்ய புலிகளின் புதிய ஆயுத படையணி
அண்மையில் மட்டக்களப்பு, அம்பாறை அரசியல் பிரிவுத் தலைவர் கௌசல்யன் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிர புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக சிறிய படையணி ஒன்றை தயார்படுத்தியிருப்பதாக இராணுவத் தரப்பு புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு ஆயுதப் பிரிவாகத் தம்மைக் காட்டிக் கொள்ளாத முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆயுதப் படையணி மூலம் எதிர்காலத்தில் தமக்குத் தேவையான அதிரடி நடவடிக்கைகளை நடத்துவதே விடுதலைப் புலிகளின் நோக்கமென்று மேற்படி அரச பாதுகாப்பு செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஆயுத நடவடிக்கைகளிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் சர்வதேசப் பாதிப்புகள் இல்லாத முறையில் தமக்குத் தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு இத்தகையதொரு விசேட படையணி அவசியமென புலிகளின் யுத்த ஆலோசகர்களால் பிரபாகரனுக்கு எடுத்துக்காட்டி அறிவுறுத்தப்பட்ட பின்னரே அத்தகைய படையணியை உருவாக்கும்படி புலிகளின் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உடைந்து சென்ற கருணா குழுவினரால் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரத் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதே மேற்படி புலிகளின் புதிய ஆயுதப் படையணியின் பொறுப்பாக இருக்குமென பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அரச பாதுகாப்புத் துறையினருக்கு இந்தத் தகவல்கள் கிடைத்த பின்னர் இராணுவப் புனனாய்வுப் பிரிவினர் இது பற்றி பரந்த முறையில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரியவருகிறது.
லங்காதீப- 20.02.2005
தமிழாக்கம் தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>