03-02-2005, 07:59 PM
விசாரணைக் குழு ஒரு கண்துடைப்பு - புலிகள்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/07/20040711164059_40370067_thamilselvan_ap203ix.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் முகமாக ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி நியமித்திருப்பது வெறும் கண்துடைப்பு என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்ட குழுக்களை அமைப்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என்று தமிழோசையிடம் பேசுகையில் தெரிவித்த விடுதலைப் புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன், ஆணைக்குழுக்களாலும் விசாரணைகளாலும் நீதி கிடைக்கும் என்று தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
இலங்கையில் இப்படி விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை பலன் தராது போனதற்கு போதிய வரலாறு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலை உள்ளிட்டு பல கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் இலங்கைப் படையினரும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் ஆயுதக் குழுக்களும்தான் என்று தாங்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தும் அரசு இதுவரை அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை என்று அவர் சாடினார்.
விடுதலைப் புலிகள் மீது ஒரு நிழல் யுத்தத்தை மேற்கொள்ளும் விதமாக அரசு நடந்துகொள்வது குறித்து போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கும் நோர்வே அனுசரணையாளர்களுக்கும் தமது அதிருப்தியினை விளங்கப்படுத்தியிருப்பதாக தமிழ்செல்வன் கூறினார்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/03/20050302140506woundedtiger_uthayakumar203.gif' border='0' alt='user posted image'>
சிகிச்சைக்குச் செல்லும் காயமடைந்த பெண் புலிகளில் ஒருவர்
BBC Thamiloosai

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>