Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதா யானை ஜெயித்தது நாடகமா? புது சர்ச்சை
#1
ஜெயலலிதா யானை ஜெயித்தது நாடகமா? புது சர்ச்சை
<img src='http://www.dinakaran.com/daily/2005/Mar/02/flash/C1124_elephant.jpg' border='0' alt='user posted image'>
ஜெயலலிதா தானம் அளித்த யானை

குருவாரூர், மார்ச் 2- குருவாயூர் கிருஷ்ணன் கோவில் யானைகளுக்கு நடந்த ஓட்டப்பந்தயத்தில் ஜெயலலிதா தானம் அளித்த யானை வெற்றி பெற்றதில் சர்ச்சை கிளம்பியுள்ளது.

கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு தமிழக முதன்மந்திரி ஜெயலலிதா ஒரு குட்டி யானை தானம் செய்தார். -கிருஷ்ணா என்று பெயரிடப்பட்ட அந்த யானையை குருவாயூர் தேவஸம் போர்டு நிர்வகித்து வந்தது. கடந்த வாரம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் ஜெயலலிதா பரிசளித்த கிருஷ்ணன் யானைதான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இது உண்மையல்ல, அந்த யானை ஓட்டப்பந்தயம் உண்மையானதாக நடக்கவில்லை. கிருஷ்ணன் யானை வெற்றிபெறும் வகையில் மற்ற யானைகள் மெதுவாக ஓட வைக்கப்பட்டன என்ற சர்ச்சை கிளப்பப்பட்டு உள்ளது. பந்தயத்தில் கண்ணன் யானைதான் பாதி தூரம் வரை முதலிடத்தில் வந்தது. திடீரென முன்னுக்கு ஓடிய யானைகள் எல்லாம் மெதுவாக ஓடின. பிறகு கிருஷ்ணனுக்கு வழிவிட்டன. அதனால் கிருஷ்ணன் யானை வென்றதாக அறிவிக்கப்பட்டது என்கிறார் கோவில் ஊழியர் சங்கத் தலைவர் திருவிக்ரமன் நாயர். வழக்கமாக போட்டியில் கலந்து கொள்ளும் கோகுல், கிருஷ்ண நாராயணன் ஆகிய யானைகள் ஓட்டப்பந்தயத்துக்கு வரவில்லை. எனவே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் பந்தயத்தை நேரில் கண்ட பரமேஸ்வரன் நாயர். இந்த பந்தயம் முடிந்த மறுநாள் தமிழக மந்திரி தளவாய்சுந்தரம் குருவாயூர் கோவிலுக்கு வந்து கிருஷ்ணன் யானையை தடவிக்கொடுத்தார், யானை பாகன்களையும் பாராட்டினார் என்று கோவில் பக்தர்கள் கூறுகிறார்கள். ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவும் அவர் தரும் கணிசமான பரிசுத்தொகைக்காகவும் கோவில் அதிகாரிகளும் யானை பாகன்களும் சேர்ந்து சதி செய்து விட்டதாகவும் குருவாயூர் பக்தர்கள் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். மாநிலம் விட்டு மாநிலத்திலும் பண பலம் இருந்தால் எதையும் எப்படியும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணமோ?

Dinakaran
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஜெயலலிதா யானை ஜெயித்தது நாடகமா? புது சர்ச்சை - by Vaanampaadi - 03-02-2005, 07:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)