Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பசுமாட்டு சிறுநீரில் "ஷேவிங் லோசன்"தயாரிப்பு
#1
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/2-3-2005/02cow.jpg' border='0' alt='user posted image'>
பசுமாட்டு சிறுநீரில் "ஷேவிங் லோசன்"தயாரிப்பு: பா.ஜ.க. அலுவலகத்தில் விற்பனை

பசு மாட்டின் பால், தயிர், வெண்ணை, சிறுநீர், சாணம் ஆகிய ஐந்தும் "பஞ்சகவ்யம்" என்று அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அவற்றை முக்கிய நோய்களை தீர்க்கும் மருந்து, மாத்திரை, லோசன்களாக தயாரித்து பா.ஜ.க. விற்கத் தொடங்கி உள்ளது. இதற்கென டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஒரு தனிக்கடை திறக்கப் பட்டுள்ளது. இதில் பசுமாட்டு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் வகை வகையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கேன்சர், வழுக்கை தலை, மனநோய், மாதவிலக்கு கோளாறு போன்றவற்றை தீர்க்கவும் பசுமாட்டு மருந்து வைத்துள்ளனர்.

பசுமாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட லோசன் வைத்துள்ளனர். இந்த லோசன் முகச்சவரம் செய்தபிறகு பயன்படுத்தக்கூடியது. இந்த லோசன் வந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிடுவதாக கடைவைத்து இருக்கும் மனோஜ்குமார் கூறினார். அவர் கடையில் பசுமாட்டுப் பொருட்களில் இருந்து தயாராகும் டூத்-பேஸ்ட், சோப், சிவப்பழகு கிரீம்கள் போன்றவையும் விறுவிறுப்பாக விற்பனை ஆகின்றன. "கிராமத் தொழிலை மேம்படுத்த உற்சாகமூட்ட இந்த பசு மாட்டுப் பொருள் மருந்துக்கடை திறக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சித்தார்த்சிங் கூறினார்.

Maalaimalar
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பசுமாட்டு சிறுநீரில் &quot;ஷேவிங் லோசன்&quot;தயாரிப்பு - by Vaanampaadi - 03-02-2005, 06:49 PM
[No subject] - by shanmuhi - 03-02-2005, 10:18 PM
[No subject] - by vasisutha - 03-03-2005, 01:03 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 02:16 AM
[No subject] - by MEERA - 03-03-2005, 02:30 AM
[No subject] - by Hariny - 03-03-2005, 02:43 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 03:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)