Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண் போராளிகள் மீது தாக்குதல்
#26
பெண் போராளிகளை சுட்ட சந்தேக நபர் கல்முனைப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

புலிகள் அமைப்புகளிலிருந்து விலகி ராசிக் குழுவில் இணைந்தவர்

அம்பாறை தம்பிலுவில் மயானத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ராசிக் குழுவைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் கொக்கட்டிச் சோலையிலிருந்து திருக்கோவில் நோக்கி ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்த மட்டு.- அம்பாறை மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி, துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சசிமதி மற்றும் அகநிலா ஆகியோர் மீது தம்பிலுவில் மயானத்திற்கு முன்பாக வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

`மொபெட்' மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருவரே இவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

தாக்குதலை நடத்திவிட்டு இருவரும் `மொபெட்'டில் தப்பிச் செல்ல முயன்றபோது, ஆட்டோவின் பின்னால் வந்த கல்முனை அரசியல்துறைப் பொறுப்பாளர் ரஞ்சன் உட்பட ஐந்து போராளிகள் இவர்களை வழிமறிக்க முற்பட்ட போது, தாக்குதல் நடத்திய துப்பாக்கி தாரி துப்பாக்கியை காட்டி இவர்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வேளையில் துப்பாக்கிதாரியை புலிகள் நன்கு அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிதாரி மற்றொருவருடன் தனது `மொபெட்' மோட்டார் சைக்கிளில் கல்முனை ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார்.

இவ்வேளையில் கல்முனை அரசியல்துறைப் பொறுப்பாளர் இவரை அடையாளம் கண்டு, ஏனைய போராளிகளிடம் அவரைக் காட்டி அவரை நோக்கி ஓடிச் சென்ற போது, நிலைமையை உணர்ந்த அந்த துப்பாக்கிதாரி அப்பகுதியில் நின்ற விஷேட அதிரடிப் படையினரிடம் ஓடிச் சென்று அடைக்கலம் தேடிக் கொண்டார்.

அவ்விடத்திற்குச் சென்ற புலிகள், ஆஸ்பத்திரியில் நோட்டம் பார்த்து காயமடைந்தவர்களை தாக்கும் நோக்கிலேயே அவர் வந்ததாகவும் இவரே தங்கள் போராளிகள் மீது தம்பிலுவிலில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.

எனினும், அதற்கு அதிரடி படையினர் மறுப்புத் தெரிவித்ததுடன், திருக்கோவில் பகுதியிலேயே தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி பொலிஸாரிடமே விசாரணைக்காக அவரை ஒப்படைப்போமெனக் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும், கல்முனைப் பொலிஸாருக்கும் இதுபற்றி புலிகள் அறிவித்ததுடன் புலிகளும் அவ்விடத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர்.

நண்பகலளவில் அங்கு வந்த கண்காணிப்புக் குழுவினர், துப்பாக்கித் தாரியென புலிகளால் அடையாளம் காட்டப்பட்ட மட்டக்களப்பு , கல்லாறைச் சேர்ந்த பிரதீபன் என்ற இந்த இளைஞர் பற்றிய விபரங்களை பெற்றதுடன் அவரை புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில், பிற்பகலளவில் பிரதீபன் கல்முனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

யார் இவர்?

கல்லாறு பிரதீபன் (31 வயது) 92 முதல் 98 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர். இவரது சில மோசமான நடவடிக்கைகளால் இவர் அமைப்பிலிருந்து நீக்கப்பட, 98 லேயே ராசிக்குழுவுடன் இணைந்துக் கொண்டார்.

அதேநேரம், மட்டக்களப்பு பற்பொடித் தொழிற்சாலை இராணுவ முகாமிலுள்ள புலனாய்வுப் பிரிவினருடனேயே இவர் செயற்பட்டு வந்தார்.

இவ்வேளையிலேயே இவர் திங்கட்கிழமை இரவு இந்தத் தாக்குதலை நடத்தியதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கண்காணிப்புக் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

--------------------------------------------------------------------------------
சுட்டது தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 05:41 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 05:43 PM
[No subject] - by eelapirean - 02-28-2005, 06:04 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 06:50 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 06:54 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 06:58 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 07:02 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 07:05 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:07 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:09 PM
Senior LTTE political official shot - by AJeevan - 02-28-2005, 08:51 PM
[No subject] - by vasisutha - 02-28-2005, 11:47 PM
[No subject] - by வியாசன் - 03-01-2005, 11:52 AM
[No subject] - by Mathan - 03-01-2005, 02:25 PM
[No subject] - by Vaanampaadi - 03-01-2005, 09:06 PM
யார் இவர்? - by eelapirean - 03-02-2005, 04:15 PM
[No subject] - by MEERA - 03-03-2005, 02:42 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:50 PM
[No subject] - by tamilini - 03-03-2005, 06:31 PM
[No subject] - by eelapirean - 03-03-2005, 06:49 PM
[No subject] - by வியாசன் - 03-03-2005, 07:12 PM
[No subject] - by shiyam - 03-03-2005, 07:16 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 09:51 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:10 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)