Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண் போராளிகள் மீது தாக்குதல்
#25
துப்பாக்கிச்; சூடு நடத்தியதில் சிங்களப் படைக்கு ஒத்துழைப்பு உண்டு: காயமடைந்த குவேனி உறுதியிட்டு கூறுகிறார்!

தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்; சூடு சிறீலங்கா விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடனேயே நடந்துள்ளதாக இந்த சம்பவத்தில் காயமடைந்த விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி மற்றும் போராளி அகநிலா ஆகியோர் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி கூறியுள்ளதாவது:

சம்பவ தினம் அக்கரைபற்று விசேட அதிரடிப்படை இராணுவ முகாம் வழியாக பயணம் செய்தபோது வழமையான பதிவுகள் அங்கு இடம்பெறவில்லை.

இந்த முகாமை கடந்து சென்ற சமயம் சற்றுத் தொலைவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த இடத்தில் காணப்பட்ட நபர் ஒருவர் எங்களை உற்று நோக்கினார். அவரை நாங்கள் கடந்து சிறிது தூரம் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்நது வந்த அவர் எமது ஆட்டேவை வழிமறித்து நிறுத்தச்; சொன்னார்.

சாரதி நிறுத்தாமல் சென்ற சமயம் கைத்துப்பாக்கியை காட்டியதையடுத்து பயத்தின் நிமித்தம் சாரதி ஆட்டோவை விட்டு குதித்து ஓடினார்.

துப்பாக்கிதாரி எங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். காயமடைந்த எங்களை யாரோ வைத்தியசாலையில் கொண்டுசென்று அனுமதித்தனர்.

முகாமிலிருந்து 200 மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப்பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புகள் இல்லாது விட்டாலும் விசேட அதிரடிப் படையினரின் முகாம் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அன்றைய தினம் எமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து பட்டிருப்பு பாலம் வழியாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் நுழைந்த சமயம் கூட வழமையான பதிவுகள் அங்கு இடம்பெறவில்லை. வெற்றுத் தாளிலேயே பதியப்பட்டது.

இதனையெல்லாம் நோகக்கும் போது சிறீலங்கா படையினரின் ஆதரவுடன் தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதை திட்டவட்டமாக அறியக்கூடியதாக உள்ளது என்றார் அவர்.

போராளி அகநிலா இந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில்ää

துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் தொங்கிக் கொண்டிருந்த சொப்பிங் பைக்குள் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து தங்கள்மீது சுட்டதாக கூறினார்.

அந்நபர் சிவப்பு கோட்டு சேர்ட் அணிந்திருந்தார். உடல் பருத்த கறுப்பு நிற மனிதர் என்றும் அகநிலா கூறினார்.

சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 05:41 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 05:43 PM
[No subject] - by eelapirean - 02-28-2005, 06:04 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 06:50 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 06:54 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 06:58 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 07:02 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 07:05 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:07 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:09 PM
Senior LTTE political official shot - by AJeevan - 02-28-2005, 08:51 PM
[No subject] - by vasisutha - 02-28-2005, 11:47 PM
[No subject] - by வியாசன் - 03-01-2005, 11:52 AM
[No subject] - by Mathan - 03-01-2005, 02:25 PM
[No subject] - by Vaanampaadi - 03-01-2005, 09:06 PM
துப்பாக்கிச்; சூடு நடத்தியதில் சிங்களப் படைக்கு ஒத்துழைப்பு - by வியாசன் - 03-02-2005, 12:07 PM
யார் இவர்? - by eelapirean - 03-02-2005, 04:15 PM
[No subject] - by MEERA - 03-03-2005, 02:42 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:50 PM
[No subject] - by tamilini - 03-03-2005, 06:31 PM
[No subject] - by eelapirean - 03-03-2005, 06:49 PM
[No subject] - by வியாசன் - 03-03-2005, 07:12 PM
[No subject] - by shiyam - 03-03-2005, 07:16 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 09:51 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:10 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)