03-02-2005, 11:42 AM
தமிழை வாசிக்கும் செயலி?
<img src='http://www.kuralsoft.com/Images/kural_splash_s.gif' border='0' alt='user posted image'>
நேற்று தமிழ் லினிக்ஸ் மடலாடற்குழுமூலம் எனக்கு அந்த மின்னஞ்சல் வந்திருந்தது.
குறள் செயலியின் புதியபதிப்பு பற்றிய அறிவித்தல்தான் அது.
நேர்த்தியான இடைமுகப்புமூலம் என்னை மிகவும் கவர்ந்திருந்த குறள் செயலியின் புதிய பதிப்பு என்றவுடன் அவசர அவசரமாக அதன் வாசிக்கும் வசதி பூர்த்திசெய்யப்பட்டுவிட்டதா என்றுதான் தேடினேன்.
வாசிக்கும் வசதி சேர்க்கப்பட்டுவிட்டதாக சொல்லியிருந்தார்கள்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் தரவிறக்கி நிறுவிக்கொண்டேன்.
<b>உண்மையிலேயே அது தமிழை வாசிக்கிறது...!</b>
<img src='http://www.kuralsoft.com/Images/kavithai_s.gif' border='0' alt='user posted image'>
அது அதமிழை வாசிக்கும் விதத்தை கேட்டவுடன் முதலில் எனக்கு தோன்றியது, "அட இந்த ஐடியா எனக்கு முதலே தோன்றாமற் போய்விட்டதே " என்பதுதான்.
ஏனெனில், அது தமிழை வாசிக்கும் தொழிநுட்பம், ஒரு சிறிய சித்துவிளையாட்டு.
தமிழுக்கான ஒலித்தொகுப்பு இயந்திரங்கள் எதையும் குறள்சொப்ட் உருவாக்கியிருக்கவில்லை.
ஏற்கனவே மைக்ரோசொப்ட் வழங்கியிருக்கும் உரத்துவாசிக்கும் வசதியை அப்படியே தமிழுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இன்னும் விளக்கமாக சொன்னால்,
நீங்கள் மைக்ரோசொப்ட் செயலி ஒன்றில் உரை ஆவணத்தை ஆங்கிலத்தில் தயாரித்து,
உரத்து வாசிக்கும்படி கட்டளையிட்டால் அது அழகாக வாசித்துவிடும்.
அதற்காக தன் உள்ளமைந்த இயந்திர தொகுப்பு குரல்வடிவங்களை பயன்படுத்தும்.
அது எவ்வாறு இயங்குகிறது என்பது மூடுமந்திரம்தான்.
நான் துருவிப்பார்த்த அளவில், அது தனித்தனி எழுத்துக்களாக ஆங்கிலத்தை வாசிக்கவில்லை.
தனித்தனிச்சொற்களாகவும் வாசிக்கவில்லை.
சொல்லப்போனால் அது இரண்டையும் செய்கிறது.
தனது அகராதியில் இருக்கும் சொற்களை , தனித்தனி சொல்லாகவும், அகராதியில் இல்லாதவற்றை தனித்தனி எழுத்துக்களாகவும்,
இன்னும், நிறுத்தற்குறிகள் வருமிடங்களில் தன் அதிர்வெண், பண்பு, போன்றவற்றை மாற்றிக்கொண்டும் வாசிக்கிறது.
இந்த இடத்தில் எங்களுக்கு தேவையானது,
அது தனது அகராதியில் இல்லாத சொற்களை தனித்தனி எழுத்துக்களாகவே வாசிக்கிறது என்பதாகும்.
cha என்றால்ல் அது ச்ச என்று வாசிக்கும்.
இந்த அடிப்படையையே குறள் சொப்ட் குழுவினர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழ் எழுத்துக்களுக்கு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆங்கில எழுத்து சேர்க்கைகள் பிரதியிடப்படுகின்றன.. இடையில் வரும் ஆங்கிலச்சொற்கள் நிராகரிக்கப்படுகின்றன. (எல்லாம் ஆணைத்தொடர்கள் மூலம், பின்னணியில்தான்)
பின்னர் அவ்வாங்கில எழுத்து சேர்க்கைகளை மைக்ரோசொப்ட் தொகுப்பாக்கக்குரல் வாசிக்கிறது.
த என்ற எழுத்தை அது வாசிக்கும் விதத்தில் இதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
மைக்ரோசொப்டின் மூன்று குரல்களில் சாம் மட்டும்தான் ஓரளவு தமிழ்போல் வாசிக்கிறார்.
குறளும் அதையே பரிந்துரை செய்திருக்கிறது.
குறள் ஆக்கபூர்வமான முயற்சி ஒன்றை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.
வாழ்த்துக்கள்.
<img src='http://www.kuralsoft.com/Images/kuralexp_s.gif' border='0' alt='user posted image'>
அவர்களின் அடுத்தபதிப்புக்கான எனது ஆலோசனைகள் சில,
கண்பார்வை சார்ந்த சிறப்புத்தேவைகள் உடையவர்களுக்கான விருப்பஅமைப்புக்களை செயல்நிலைக்கு கொண்டுவருவதற்கான ஒரு தெரிவினை சேருங்கள்.
அது இடைமுகப்பில் தெளிவான பெரிய படவுருவாகவும் இருக்கவேண்டும். அதற்கு விசைப்பலகை குறுவழி கட்டாயம் இருக்கவேண்டும்.
அத்தெரிவின் கீழ் பின்வரும் வசதிகளை சேருங்கள்-
எந்த எழுத்தை தட்டச்சு செய்கிறோமோ, அதனை உரத்து வாசித்துவிடுதல்.
எந்த இடத்தில் சுட்டியை வைக்கிறோமோ, அதற்கு முன்னாலுள்ள சொல்லையும் பின்னாலுள்ள சொல்லையும் உரத்து வாசித்துவிடுதல்.
தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது, ஒவ்வொரு இடைவெளியிலும் (space) இறுதியாக எழுதிய சொல்லை உரத்து வாசித்துவிடுதல்.
உரை ஆவணமொன்றை திறந்ததும் அதனை உரத்து வாசிக்க ஆரம்பித்தல்
அடுத்தது, இது மிக நேர்த்தியாக செய்யத்தக்கது.
இடைமுகப்பில் உள்ள அத்தனை சொற்களுக்கும், படவுருக்களுக்குமான ஒலிவடிவத்தை பதிவு செய்து வைத்துக்கொண்டு,
சுட்டியை நாங்கள் அவ்வவ் தெரிவுகளுக்கும் படவுருக்களுக்கும் அருகில் கொண்டு செல்லும் போது , பதிவு செய்யப்பட்ட உரை ஒலிக்கச்செய்யப்படல்வேண்டும்.
கூடவே உதவிக்குறிப்புக்கள் முழுமையாக ஒலிவடிவில் வழங்கப்படவேண்டும்.
மற்றது தமிழுக்கு சொற்பிழை திருத்தி வைத்திருப்பது நல்ல முயற்சி ஆனால் அது அவ்வளவு அவசியமானதல்ல.
இப்போதைக்கு நிறுத்தற்குறிகளுக்கான ஒரு சிறு இலக்கணத்திருத்தியை இணைக்கலாம். சொற்பிழை திருத்திக்கு பதிலாக நல்லதொரு தமிழ்- ஆங்கில அகராதியை உள்ளமைத்தல் மிகவும் சிறப்பு.
வின்டோஸ் பாவனையாளர்களுக்கு குறள் ஓர் இன்றியமையாத செயலி.
முழுமையான தமிழ் பாவனைக்கு அது ஒன்றே போதும்.
கட்டாயம் ஒருமுறை அதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
http://www.kuralsoft.com/download_e.htm[/size]
நன்றி - மயூரன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>