Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நட்சத்திர கலை நிகழ்ச்சி 60 நடிகர்-நடிகைகள் பங்கேற்பு
#1
துபாய்-அபுதாபியில் 2 நட்சத்திர கலை நிகழ்ச்சி 60 நடிகர்-நடிகைகள் பங்கேற்பு


சென்னை, மார்ச். 2- துபாய்-அபுதாபியில் 2 நட்சத்திர கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 60 நடிகர்- நடிகைகள் பங்கேற்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதில் ஏற்கனவே இருந்த விஜயகாந்த் தலைமையிலான அணியே மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளனர். சரத்குமார் பொதுச் செயலாளராகவும், நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன் உப தலைவர்களாகவும், கே.என்.காளை பொருளாளராகவும் தேர்வு பெற்றுள்ளனர். செயற்குழுவில் சத்யராஜ், பிரபு, ராதாரவி, குஷ்பு, மனோரமா, ரேவதி போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நடிகர் சங்கத்திற்கு 5 அடுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக சங்க புதிய நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் விழா நடந்தது. அதன் மூலம் திரண்ட நிதியை கொண்டு நடிகர் சங்க கடன் அடைக்கப்பட்டது. தற்போது நடக்க உள்ள கலை நிகழ்ச்சியை கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இம்முறை நட்சத்திர கலை விழா துபாய் மற்றும் அபுதாபியில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

வருகிற ஏப்ரல் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் துபாய், அபுதாபியில் இந்த 2 கலை நிகழ்ச்சிகளும் நடத்த எண்ணி உள்ளனர். அதற்கான அரங்கம் இன்னும் முடிவு செய்யப்படாததால் நடிகர், நடிகைகளுக்கும் இன்னும் தேதி பற்றி உறுதியாக தெரிவிக்கவில்லை. இம்முறை 60க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் செல்வார்கள் என்று தெரிகிறது. மேலும் சென்னையிலும் ஒரு நட்சத்திர கலை விழா நடத்தலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

கடந்த முறை சிங்கப்பூர், மலேசியாவில் நடத்திய நிகழ்ச்சிபோலவே துபாய், அபுதாபியில் நடக்க உள்ள கலை நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நட்சத்திர கலை குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக என்னென்ன புதிய நிகழ்ச்சிகளை இதில் வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வெளிநாடு கலை நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பிறகு நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நட்சத்திர கலை நிகழ்ச்சி 60 நடிகர்-நடிகைகள் பங்கேற்பு - by Vaanampaadi - 03-02-2005, 11:08 AM
[No subject] - by வியாசன் - 03-02-2005, 11:54 AM
[No subject] - by MEERA - 03-03-2005, 02:15 AM
[No subject] - by vasisutha - 03-04-2005, 12:14 AM
[No subject] - by kavithan - 03-04-2005, 01:48 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 03:22 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 03:38 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)