Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண் போராளிகள் மீது தாக்குதல்
#23
காயமடைந்த இரு பெண் போராளிகள் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றம்
கல்முனை நிருபர் செவ்வாய்க்கிழமை 01 மார்ச் 2005 22:37 ஈழம்

அம்பாறை மாவட்டம் தம்பட்டையில் நேற்று மாலை இடம்பெற்ற இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பெண் போராளிகளில் இருவர் இன்றிரவு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனிää துணை அரசியல்துறை பொறுப்பாளர் சசிமதி ஆகியோரே குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

அடுத்த பெண் போராளியான அகநிலா ஹெலிகொப்டரில் இட நெருக்கடி காரணமாக தொடர்ந்தும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கிய ஹெலிகொப்டரில் இவர்கள் அம்பாறை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தயார் நிலையிலிருந்த சிறியரக விமானமொன்றில் கொழும்பு ரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

பின்னர் அங்கிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் குறிப்பிட்ட தனியார் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த பயணத்தின் போது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பிரதிநிதியொருவரும் சென்றிருந்தார்.

இதேவேளை இப்படியான சமப்வங்களை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகம் புலித்தேவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விசேட அதிரடிப்படையின் ப10ரண கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இந்த சம்பவம் இடம் பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 05:41 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 05:43 PM
[No subject] - by eelapirean - 02-28-2005, 06:04 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 06:50 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 06:54 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 06:58 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 07:02 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 07:05 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:07 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:09 PM
Senior LTTE political official shot - by AJeevan - 02-28-2005, 08:51 PM
[No subject] - by vasisutha - 02-28-2005, 11:47 PM
[No subject] - by வியாசன் - 03-01-2005, 11:52 AM
[No subject] - by Mathan - 03-01-2005, 02:25 PM
[No subject] - by Vaanampaadi - 03-01-2005, 09:06 PM
யார் இவர்? - by eelapirean - 03-02-2005, 04:15 PM
[No subject] - by MEERA - 03-03-2005, 02:42 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:50 PM
[No subject] - by tamilini - 03-03-2005, 06:31 PM
[No subject] - by eelapirean - 03-03-2005, 06:49 PM
[No subject] - by வியாசன் - 03-03-2005, 07:12 PM
[No subject] - by shiyam - 03-03-2005, 07:16 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 09:51 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:10 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)