Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண் போராளிகள் மீது தாக்குதல்
#22
அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பின்றி இத்தாக்குதல் இடம்பெற்றிருக்க முடியாது: விடுதலைப் புலிகள்
கிளிநொச்சியிலிருந்து தனோஜன் செவ்வாய்க்கிழமை 01 மார்ச் 2005 21:18 ஈழம்
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி மற்றும் சசிமதிää அகநிலா ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றை பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையை இங்கே தருகிறோம்:

28.01.2005 அன்று விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி உள்ளிட்ட மூன்று பெண் போராளிகள்மீது ஆயுதக்குழுவினரால் நேற்றுமேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர்கள் மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி மற்றும் சசிமதிää அகநிலா ஆகியோர் நேற்று மாலை 6.00 மணியளவில் கொக்கட்டிச்சோலையிலிருந்து தங்கவேலாயுதபுரத்தை நோக்கி முச்சக்கர வண்டியொன்றில் சென்றுகொண்டிருந்தபோதுää தம்பிலுவில் சவக்காலைக்கண்மையில் வைத்து உந்துருளியில்வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராளிகள் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை இடைமறித்துத் தாக்குதல் நடாத்திய நபர் அதன்பின்னர் அருகேயுள்ள படைமுகாமினுள் சென்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

யுத்தநிறுத்த உடன்படிக்கையின் விதிமுறைகளுக்கமைய இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுதபாணிகளாக அரசியல் பணியிலீடுபட்டு வரும் எமது போராளிகள் மீது தாக்குதலை மேற்கொள்வது அப்பட்டமான யுத்தநிறுத்த மீறலாகும். இத்தாக்குதல் நடைபெற்ற வீதியில் விசேட அதிரடிப்படையினர் சகல வாகனங்களையும் சோதனையிட்டு வருவதால் அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பின்றி ஆயுதக்குழுவினர் இத்தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியாது.

படைத்தரப்பின் அநுசரணையுடனும் ஆதரவுடனும் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான தாக்குதல்கள் தடைப்பட்டுப் போயிருக்கும் சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான நிவாரணம்ää புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் பெரும் பங்கம் விளைவிக்கும் என்பதுடன் 3 வருடகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கும் பாரதூரமான விளைவையே எற்படுத்தும் என நாம் அஞ்சுகிறோம்.

யுத்தநிறுத்த காலப்பகுதியில் பல பொறுப்பாளர்களையும் போராளிகளையும் இவ்வாறான துரோகத்தனமான தாக்குதல்களால் இழந்தும்கூட பொறுமைகாத்துவரும் தமிழ் மக்களையும்; விடுதலைப்புலிகளையும் சீண்டும் நடவடிக்கையாகவே இவ்வாறான சம்பவங்கள் அமைகின்றன. இவற்றினால் ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாக இலங்கைப்போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவானது தனது அவதானிப்பையும் அறிக்கையையும் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 05:30 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 05:41 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 05:43 PM
[No subject] - by eelapirean - 02-28-2005, 06:04 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 06:50 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 06:54 PM
[No subject] - by tamilini - 02-28-2005, 06:58 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 07:02 PM
[No subject] - by Mathuran - 02-28-2005, 07:05 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:07 PM
[No subject] - by Vaanampaadi - 02-28-2005, 08:09 PM
Senior LTTE political official shot - by AJeevan - 02-28-2005, 08:51 PM
[No subject] - by vasisutha - 02-28-2005, 11:47 PM
[No subject] - by வியாசன் - 03-01-2005, 11:52 AM
[No subject] - by Mathan - 03-01-2005, 02:25 PM
விடுதலைப்புலிகளின் அறிக்கை - by Vaanampaadi - 03-01-2005, 09:03 PM
[No subject] - by Vaanampaadi - 03-01-2005, 09:06 PM
யார் இவர்? - by eelapirean - 03-02-2005, 04:15 PM
[No subject] - by MEERA - 03-03-2005, 02:42 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:50 PM
[No subject] - by tamilini - 03-03-2005, 06:31 PM
[No subject] - by eelapirean - 03-03-2005, 06:49 PM
[No subject] - by வியாசன் - 03-03-2005, 07:12 PM
[No subject] - by shiyam - 03-03-2005, 07:16 PM
[No subject] - by Mathan - 03-03-2005, 09:51 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 10:10 AM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:01 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)