Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மொழிபெயர்ப்பு இயந்திரம்
#1
மொழிபெயர்ப்பு இயந்திரம்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/03/20040304151211robot_papero66.jpg' border='0' alt='user posted image'>


புதியதொரு நாட்டுக்கு - இடத்துக்குச் செல்கிறீர்களா, மொழி புரியவில்லையா, கவலையை விடுங்கள், மொழிபெயர்ப்பு இயந்திரம் - அதாவது மொழிமாற்றி என்பது தயார் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

அதாவது புதிய மொழியில் ஒரு வாசகத்தைக் கண்டீர்கள் என்றால், அதை அப்படியே அந்த இயந்திரத்தில் டைப் செய்து கொண்டால், உங்களுக்கு வேண்டிய மொழியில் - அதாவது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் - அதன் மொழிபெயர்ப்பு அப்படியே அச்சாகிவிடும் என்கிறார்கள் இவர்கள்.

இதைப்போன்ற மொழிமாற்றிகள் சில ஏற்கனவே இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

ஆனால் வேறு சில விஞ்ஞானிகள் இதுபற்றி சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.

உதாரணமாக, அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற கம்பராமாயண வரிகளை, இந்த மொழிமாற்றியில் இட்டால், ராம பிரானும் சீதையும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள் என்கிற தொனிப்பொருள் மொழிபெயர்ப்பில் வருமா என்பது சந்தேகம்தான்.

ஆக, தமிழைப்போன்றே எந்த ஒரு மொழிக்கும் சிறப்பு அம்சங்கள் என்று சில இருப்பதால் அவற்றை எந்திர கதியில் மொழிமாற்ற முடியாது என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

BBC Thamiloosai
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மொழிபெயர்ப்பு இயந்திரம் - by Vaanampaadi - 03-01-2005, 08:41 PM
[No subject] - by Hariny - 03-01-2005, 10:04 PM
[No subject] - by kavithan - 03-02-2005, 05:52 AM
[No subject] - by Mathan - 03-02-2005, 11:42 AM
[No subject] - by kavithan - 03-02-2005, 11:34 PM
[No subject] - by tamilini - 03-02-2005, 11:41 PM
[No subject] - by kavithan - 03-02-2005, 11:52 PM
[No subject] - by tamilini - 03-02-2005, 11:57 PM
[No subject] - by kavithan - 03-03-2005, 12:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)