03-01-2005, 08:39 PM
கிழக்கிலங்கையில் புலிகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041201170928chandrika.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் முகமாக, ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியமித்துள்ளார்.
அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு எந்த பயங்கரவாதக் குழு அல்லது வேறு சக்தி காரணம் என்று இந்த ஆணைக்குழு ஆராயும்.
இது தொடர்பாக இன்று ஜனாதிபதி செயலகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இரண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த ஆணைக்குழுவில் இடம்பெறுவார்கள்.
ஒருமாத காலத்துக்குள் இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும்.
கடந்த மாதம் விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளார் கௌசல்யன் கொலை செய்யப்பட்டதுடன், நேற்று திங்கட்கிழமை அந்த அமைப்பின் மூன்று பெண் உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
BBC தமிழோசை

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>