Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜேவிபியும் ஹெல உறுமயவும் - இனவாதம்
#2
பௌத்தத்திற்கு புலிகள் முன்னுரிமையளித்தால்
பிரபாகரன் ஆண்டாலும் ஆட்சேபனையில்லை அதுரலியே ரத்ன தேரர்

சிங்கள இனத்திற்கும், பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்க புலிகள் முன்வருவார்களாயின் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்நாட்டை ஆட்சி செய்தாலும் எமக்கு ஆட்சேபனை இல்லை என ஜாதிக ஹெல உறுமய வின் பாராளுமன்றக்குழு தலைவர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இந்நாட்டில் சிங்கள இனத்துக்காக வாதாடும் ஒரே கட்சி ஜாதிக ஹெல உறுமய மட்டும்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

வடக்கு கிழக்கு மாகாணம் தமிழர்களின் தாயகம் என்பதை உறுதி செய்ய புலிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், சிங்களவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று இருப்பதில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக், கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என இரு பிரதான கட்சிகள் இந்நாட்டில் உள்ளன. அத்துடன், மூன்றாவது சக்தியாக மக்கள் விடுதலை முன்னணியும் செயற்படுகின்றது. ஆனால், சகல கட்சிகளும் இலங்கை பௌத்த, சிங்கள நாடு என்பதை குறிப்பிட்டுக் கூறுவதில்லை. இது பல்லின மக்கள் வாழும் நாடு என்றே கூறுகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சி செல்வந்தர்கள் சார்ந்ததாகவே செயற்பட்டு வருகின்றது. சுதந்திரக் கட்சியும் ஆரம்ப காலத்தில் பௌத்த மதத்தை சார்ந்ததாக செயற்பட்டாலும் தற்போது அக்கட்சியின் நிலைப்பாடும் மாற்றமடைந்து வருகின்றன.

மக்கள் விடுதலை முன்னணியும் ""இலங்கை மக்கள்'' என்ற பதத்தை பயன்படுத்துகின்றதே தவிர பௌத்த, சிங்கள மக்கள் என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதில்லை.

இந்நாடு சிங்கள, பௌத்த மக்களுடையது என்பதை எமது ஜாதிக ஹெல உறுமய கட்சி மட்டுமே தொடர்ந்து கூறி வருகின்றது.

தற்போது அமுலில் இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டம் பௌத்த, சிங்கள மக்களுக்கு சாதகமானதாக இல்லை. இது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. ஜாதிக ஹெல உறுமய பௌத்த, சிங்கள மக்களின் உரிமைகளுக்காக போராடும் என்பதை உறுதிபடதெரிவிக்கிறேன் என்றார்.


வீரகேசரி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பிரபாகரன் ஆண்டாலும் ஆட்சேபனையில்லை - by Vaanampaadi - 03-01-2005, 11:59 AM
[No subject] - by Mathan - 03-03-2005, 12:57 PM
[No subject] - by Mathan - 03-04-2005, 02:55 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)