03-01-2005, 11:57 AM
காயப்பட்ட பெண் போராளிகளுக்கு தொடர்ந்தும் சிகிச்சை
கல்முனை நிருபர் செவ்வாய்க்கிழமை 01 மார்ச் 2005 16:19 ஈழம்
அம்பாறை மாவட்டம் தம்பட்டையில் நேற்று மாலை இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பெண் போராளிகள் மூவரும் தொடர்ந்தும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனிக்கு மார்பில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு முதுகு வழியாக வெளியேறியுள்ளது.
ஏனைய இரண்டு பெண் போராளிகளுக்கும் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்களுக்கு உடனடியாக அவசர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் இவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வேறு வைத்தியசாலையொன்றிற்கு சிகிச்சைக்காக இவர்களை கொண்டு செல்வதற்குரிய நிலையில் இவர்களது உடல் நிலை இடம் கொடுக்கவில்லை.
அப்படி கொண்டு செல்வதாயின் விமானம் மூலமே கொண்டு செல்ல வேண்டும் என்றும் அந்த அதிகாரி இது பற்றி மேலும் தெரிவித்தார்.
Puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>