03-01-2005, 11:55 AM
மட்டக்களப்பு அழிவை பார்வையிட்டார் சார்ள்ஸ்
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/March/01/ch.jpg' border='0' alt='user posted image'>
அன்பான வார்த்தையால் ஆறுதலளித்தார்
கடல்கோளால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலொன்றான மட்டக்களப்புக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்த பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் பேரழிவுக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறியது மட்டுமல்லாமல் இயல்பு வாழ்வை ஏற்படுத்துவதற்கான உதவிகளை பிரிட்டன் வழங்குமெனவும் உறுதியளித்தார்.
நேற்றுக் காலை 6 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இளவரசர் அங்கிருந்து காலை 7.30 மணியளவில் விசேட விமானத்தின் மூலம் மட்டக்களப்பு வெபர் மைதானத்திற்கு வந்தார். பின்னர் மட்டக்களப்பு, கல்லடி, திருச்செந்தூர், டச்பார் பகுதிகளுக்கு காரில் சென்றார்.
திருச்செந்தூர் ஆலயத்தில் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட வழிபாட்டில் கலந்துகொண்ட இளவரசர் பின்னர் கல்லடி பிரதேசத்தை சுற்றி பார்வையிட்டார். பின்னர் நாவலடிக்கு சென்றார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர் காரியாலயத்துக்கு இளவரசர் சென்றபோது சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் ரி. வசந்தராஜா அவரை வரவேற்றார்.
அங்கு உரையாற்றிய இளவரசர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் தங்கள் பணிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த உதவ வேண்டும். குறுகிய நேர விஜயத்தை மேற்கொண்டு வந்ததால் இங்குள்ள பாதிப்புற்ற, ஏனையவர்களையும் சந்திக்க முடியாமைக்கு வருந்துகின்றேன். முடியுமானால், மீண்டும் ஓர்தடவை இங்கு வரும்போது அனைத்து தரப்பினரையும் சந்திப்பேன். அகதிமுகாம் வாழ்க்கையில் இருந்து மக்களை விரைவாக மீட்டு வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது அவர்கள் கண்கலங்கியவாறு தமது குறைகளை தெரிவித்தனர். "உயிர்களையும், உடைமைகளையும் இழந்த எங்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் முறையாகக் கிடைக்கவில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளே கிடைக்கின்றன. உணவுப் பொருட்களும், முத்திரைகளையும் தவிர வேறு எந்த உதவிகளுமே கிடைக்கவில்லை. கடும் வெயிலால் கூடாரத்திற்குள் இருக்க முடியாமல் அவதியுறுகின்றோம். எங்களுக்கு தற்காலிக குடிமனைகளையாவது உடனடியாக அமைத்துத் தாருங்கள்" என மிக உருக்கமாக வேண்டினர். இதனைக் கேட்ட இளவரசர் வேதனையடைந்தார்.
இதன்பின் இளவரசர் முகத்துவாரம், பால மீன்மடு, மட்டிக்களி ஆகிய பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள அகதிமுகாம்களை பார்வையிட்டார். மக்களுடன் மக்களாக கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பொது மக்களும் மற்றும் மீனவர் அமைப்புகளும் இளவரசரிடம் மகஜர்களை சமர்ப்பித்தனர்.
பாதிப்புக்குள்ளான மீனவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், சேதமடைந்த படகுகளையும் அவர் பார்வையிட்டார். இதன் பின் தனது விஜயத்தை முடித்துக்கொண்டு விஷேட விமானம் மூலம் கொழும்புக்கு திரும்பினார்.
கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நெவில் விஜயசிங்க, மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர் வே. சண்முகம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் பீ.எம்.எம். ஹம்சா, முப்படைகளின் தளபதி, இராணுவத்தளபதி ஆகியோர் இளவரசருடன் வருகை தந்திருந்தனர். இளவரசர் சுமார் 2 மணித்தியாலம் மட்டக்களப்பில் செலவிட்டார்.
தினக்குரல்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>