03-01-2005, 11:47 AM
மதனுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்தும் நேரத்தில் சில அவதானங்களையும் ஆலோசனைகளையும் கூற ஆசைப்படுகிறேன்.
மட்டுறுத்துனர் பணியெண்பது தனியே தேவையற்ற விவாதங்களை வெட்டித்தள்ளுவதும்.எச்சரிப்பதும் அல்ல.அவையும் தேவையே என்றாலும் விவாதத்தை வழிநடத்திச் செல்வதே மட்டுறுத்துனருடைய தலையாய கடமை.அதற்காக மட்டுறுத்துனர் எல்லாம் தெரிந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை.நிறைய வாசிப்பவராக இருந்தாலே போதும்.
மதன் களத்தில் கொண்டுவந்து போடும் விடயங்களைப் பார்க்கும்போது பரந்ததொரு வாசிப்புத்தளத்தில் அவர் செயற்படுவது புரிகிறது ஆகவே விவாதத்தை வழிநடத்திச் செல்பவராக அவர் விளங்கவேண்டுமென எதிர்பார்க்கிறேன்.மதன் மட்டுமன்றி குருவிகள்,தமிழினி,கவிதன் சண்முகி முதலியோர் வலைப்பதிவுகளிலும் உலாவுபவர்கள் அங்கு பெறும் வாசிப்பனுபவங்களை இங்கேயும் பகிர்ந்துகொள்ளலாம் மூத்த உறுப்பினர்களாக களத்தை வழிநடத்தவேண்டும்.கருத்து திசைமாறும்போது நினைவூட்டவேண்டும் நகைச்சுவை உணர்வென்பது அவசியமான ஒன்றுதான் ஆனால் அதை தேவைக்கதிகமாகப் பயன்படுத்தும்போது வாசிப்பவருக்குச் சலிப்பே உண்டாகும்.இங்கே கருத்தாடுபவர்களில் வினைத்திறமான கருத்தாளர்கள் உண்டு ஆனால் நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்க நிறையப் பேர் பிரியப்படுகிறார்கள்.அவர்களும் நிற்கும் இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தால் யாழை வினைத்திறமான கருத்துக்களமாக உருவாக்கலாம்.
சில வேலைகள் அழுத்திக்கொண்டிருக்கின்றன.அவற்றை முடித்துவிட்டு உங்கள் கருத்தாடலில் நானும் இணைந்துகொள்கிறேன்.ஆரம்பியுங்கள் நண்பர்களே இன்று புதிதாய்ப் பிறப்போம்.
அன்புடன்
ஈழவன் என்கின்ற
ஈழநாதன்

\" \"