02-28-2005, 01:28 PM
இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பு விஜயம் உண்மை நிலையை நேரில் பார்த்தார்
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40872000/jpg/_40872539_charlesredcross_pa203.jpg' border='0' alt='user posted image'> <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40872000/jpg/_40872537_charlesfisherman_pabody.jpg' border='0' alt='user posted image'>
அரசிடமிருந்து உதவி கிடைக்கவில்லை என்றனர் மீனவர்கள்
28 02 2005
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்கிருந்து நேரடியாக உலங்குவானூர்தியில் மட்டக்களப்புக்கு சென்றார். சுனாமி கடற்கோளின் பேரழிவுகளுக்கு உள்ளான மட்டக்களப்பு நகரின் சுற்றுப்புறத்தில் உள்ள நாவலடி திருச்செந்தூர் கரையோர பகுதிகளை நேரில் பார்வையிட்டார். பாதிப்புக்களை பார்த்து தாம் மிகவும் மனம் கலங்குவதாக அவர் சொன்னார்.
கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் அவரை வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் மின்சக்தி அமைச்சர் பிரேமஜயந்த பிரதி வெளிவிவகார அமைச்சர் வர்ணபால ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து அவர் விசேட விமானப்படை உலங்குவானூர்தியில் மட்டக்களப்பு சென்றார். கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் காலை 7.10 மணிக்கு அவர் வந்திறங்கினார். அங்கிருந்து நாவலடிக்கு சென்று கடற்கோள் பாதிப்புக்களை பார்வையிட்டார். பிரித்தானிய செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவரான அவர் அந்த அமைப்பினால் மட்டிக்கழியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக குடியிருப்புக்களை சென்று பார்வையிட்டார்.
சுனாமியில் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களை அவர் சந்தித்தார். வேலுப்பிள்ளை செல்லையா என்பவரை இளவரசர் சார்ள்ஸ் சந்தித்து அவர் தமது தொழிலை மீண்டும் தொடக்குவதற்கு ஏதேனும் உதவி கிடைத்துள்ளதா என்று வினாவினார். தமது படகையும் அனைத்து மீன்பிடி வலைகளையும் உபகரணங்களையும் இழந்துவிட்ட அவர் தமக்கு உதவுவதாக அரசாங்கத்திடம் இருந்து உறுதி மட்டுமே கிடைத்திருக்கின்றது என்றும் இதுவரை எந்த உதவியும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் சொன்னார்.
கடற்கோளில் ஒருபகுதி சேதமான இந்து ஆலயமொன்றையும் அவர் சென்று பார்த்தார். அங்கு அவர் மாலை அணிவித்தும் நெற்றியில் விபூதி சந்தனமிட்டும் வரவேற்கப்பட்டார்.
செஞ்சிலுவை சங்கத்தின் தொண்டர்களை அவர் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். உங்களுடைய கடின பணிகளுக்கு நடுவே நான் வந்து உங்களை சிறிது இடைநிறுத்தியதை தவிர நான் வேறொன்றும் செய்துவிடவில்லை என்று வருத்தமாயிருக்கின்றது. நான் சென்றதும் நீங்கள் மேலும் கூடுதலாக பாடுபட வேண்டும் என்று அவர்களிடம் இளவரசர் சார்ள்ஸ் சொன்னார்.
அவர் கொழும்பு திரும்பியதும் ஜனாதிபதி சந்திரிகாவை காலை 11 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். ஆறு மணி நேர இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார். அதையடுத்து நியூசீலந்து பிஜி தீவுகள் ஆகியவற்றுக்கும் அவர் செல்கின்றார்.
இளவரசர் சார்ள்ஸ் தாம் மட்டக்களப்புக்கு சென்று அங்குள்ள உண்மையான நிலையை நேரில் பார்வையிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். முதலில் அவர் மட்டக்களப்பு செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதற்கு பதிலாக அவர் திருகோணமலைக்கு சென்று பார்வையிடலாம் என்று கூறியிருந்தது. ஆனால் சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்புக்கே தாம் செல்ல வேண்டும் என இளவரசர் சார்ள்ஸ் வலியுறுத்தியதை தொடர்ந்து அரசு வேறுவழியின்றி அதற்கு இணங்கியது.
சுனாமி அழிவுகளை பார்வையிட வரும் வெளிநாட்டு தலைவர்களை சிறீலங்கா அரசு மாத்தறை உட்பட நாட்டின் சிங்கள தென்பகுதிகளை காட்டிவிட்டு திருப்பி அனுப்புவதும் கூடுதல் பாதிப்புக்கு உள்ளான வடக்கு கிழக்குக்கு அவர்களை செல்ல விடாது தடுத்து வருவதும் தெரிந்ததே. ஐநா செயலாளர் நாயகம் கோபி அனான் சுனாமி அழிவுகளை பார்வையிட வந்தபோது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவுக்கு செல்ல அவர் விரும்பிய போதிலும் சிறீலங்கா அரசு அதனை தடுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பு செல்வது நடைபெறுமா என்பது இறுதிநேரம் வரை நிச்சயமற்றதாகவே இருந்தது. இவ்வகையில் இளவரசர் சார்ள்ஸ் தாம் நினைத்ததை வலியுறுத்தி செயற்படுத்தியதன் மூலம் தமிழ் மக்களின் பாராட்டை பெறுகின்றார்.
இளவரசர் சார்ள்ஸ் இதற்கு முன்னர் 1988ஆம் ஆண்டில் இலங்கையின் 50ஆம் ஆண்டு சுதந்திர தின வைபவங்களுக்காக வருகை தந்திருந்தார்.
அவரது மட்டக்களப்பு விஜயம் பற்றி சுனாமி அகதிகளுக்கு உதவும் பிரித்தானிய ஒக்ஸ்பாம் தொண்டர் அமைப்பின் இலங்கை பிரிவு தலைவர் டாவிட் கிரோபோர்ட் கருத்து தெரிவிக்கையில் உங்களை நாம் மறந்துவிடவில்லை என்று மக்களிடம் தெரிவிக்கும் எவையும் வரவேற்கப்பட வேண்டியதை என்று சொன்னார். தூரத்தேயுள்ள இடத்துக்கு செல்வதற்கு இளவரசர் சார்ள்ஸ் கூடுதல் முயற்சி எடுத்ததும் வரவேற்கப்பட வேண்டியது என்று அவர் கூறினார்.
பிரித்தானிய அரச குடும்ப அதிகாரி ரெபெக்கா பக்காம் இந்த விஜயம் பற்றி குறிப்பிடுகையில் இதவொரு அரசியல் விஜயமல்ல என்று சொன்னார். உள்ளூர் மக்களையும் தொண்டர்களையும் சந்திப்பதே அவரது நோக்கம் என்று தெரிவித்தார்.
செய்திகோவை

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>