Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதல்!விமர்சனம்
#9
உண்மையில் ' காதல்' படத்தில் சொல்லப்படுவது காதல்தானா? பாலின ஈர்ப்பு மட்டுந்தானே?

<img src='http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES/KATHAL02.GIF' border='0' alt='user posted image'>

வளரிளம் பருவம் என்று சொல்லப்படும் விடலைப்பருவம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டம். முளைத்திராத மீசையை திருகிப் பார்ப்பதிலும், தாவணிகள் காற்றில் பறக்க நடக்கும் போது தேவதையாய் உணர்வதும் இக்கால்த்தில்தான். ஆண், பெண், இருபாலருக்கும் பொறுப்புகளைச் சுமக்கச் செல்லும் முன்பான கூட்டுப்புழுப் பருவம். இதனை பத்திரிகைக் கதைகளும், டிவி மீடியாக்களும் எப்படிக் கையாள்கின்றன? விடலைப் பருவம் பற்றிய எத்தகைய பார்வையை அவை முன்வைக்கின்றன என்ற கேள்விக்குப் பதில்?

சினிமா என்ற பெரிய மாயத்திரையின் கைகளில் இந்த ணீபீஷீறீமீsநீமீஸீt பருவம் படும் பாடு கொஞ்சமல்ல. தமிழ்சினிமா பார்த்து வளர்ந்த இளைஞனின் தோற்றமும், மனஓட்டமும் வாழ்க்கை மீதான அவனது பார்வையைத் தரும். அதிலும் சமீபத்திய இளைஞர்களுக்கு மன்மதன் சிம்புவும், 7ஜி ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணாவின் சிரிப்பும் தான் ஆதர்சம்.

செக்ஸ், அதற்கான முயற்சிகள், நட்பு என்ற போர்வையில் எந்த செயலுக்கும் அங்கீகாரம் அளித்தல் இது மட்டுமே வாழ்க்கையின் பிரதானம் என்றே சமீபத்திய தமிழ்சினிமாக்கள் காட்டுகின்றன. அதிலும் காதல் என்ற உணர்வைப் பற்றி இவர்கள் கூறவிட்டால், எடுத்த பிலிம்ரோலில் பிளேடால் குதறிவிட்டாற்போல் வலிவரும் போல.

முதற்காதல் எனப்படும் புரியாத உணர்வுகளுக்கு கட்டம் கட்ட ஆசைப்படும் உள்ளங்களுக்கு இந்த மாதிரி தமிழ்சினிமாக்களே தாஜ்மஹால்.

சமீபத்தில் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வெளியான காதல் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. நேர்த்தியான திரைக்கதையும், அதைச் சொல்லிய பாங்கும் அருமை. ஆனால் உண்மையில் அந்தப்படத்தில் சொல்லப்படுவது காதல்தானா? அது பாலின ஈர்ப்பு மட்டுந்தானே? இந்தக் கேள்வி சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் இயக்குநர் ரா. பார்த்திபன் கேட்டது. இக் கேள்வி சமூகப் பொறுப்புள்ள,விடலைப் பருவம் கடந்து வந்த ஒவ்வொருவருக்குள்ளும் நியாயமாக எழுவது.

இப்படத்தில் மதுரை செயிண்ட் ஜோசப் பெண்கள் பள்ளியின் பெயர் படத்தில் ஆறுமுறை வருகிறது. படத்தின் நாயகி இப்பள்ளியின் மாணவி என்று காட்டப் பட்டதால், உண்மையிலேயே இது போன்ற சம்பவம் இங்கு நடந்துள்ளதா என்று பலர் கேட்கின்றனர். இது படிக்கும் மாணவிகளின் மனதை பாதிப்பதாக இப்பள்ளியின் தாளாளர் ஜெயராணி காதல் படத்திற்கெதிராக வழக்கு தொடுத்துள்ளார். அது சரி- படத்தின் முடிவில் உண்மைக் கதை என்றல்லவா போடுகிறார்கள். காதல் படத்தில் வர்ற மேன்ஷன்ல தான் நான் தங்கியிருக்கேன், என்று ஒருவர் பெருமையோடு சொல்லும்போது இதுபோன்ற சந்தேகங்களும் வரத்தான் செய்யும். ஏன்னா, நம்மாளுங்க விவரம் அப்படி.

இப்படிப்பட்ட காதல் படங்களில் நடிக்கும் தனுஷ், பரத், ரவிகிருஷ்ணா என்ற நாயகர்களுக்கான லிஸ்ட் தொடர்கிறது. இவர்களது சிறப்பம்சம் அடுத்த
வீட்டுப் பையன் போன்ற தோற்றம். இப்படித்தான் இவர்கள் விளம்பரம் செய்யப்படுகிறார்கள். படத்தில் இவர்களது சேட்டைகளை பார்க்கின்றனர் இன்றைய அப்பாக்கள். பெண்களைப் பெற்ற அப்பாக்கள் பெரும்பாலோனோருக்கு பக்கத்தில் வீட்டுப் பையன்களை இதனாலேயே பிடிப்பதில்லை.

இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு துள்ளுவதோ இளமை சினிமா வந்தவுடன் சகமாணவியிடம் இது போன்று சீண்டுவதுதான் இவ்வயதுக்கான தர்மமா? என்ற கேள்வி பல மாணவர்களுக்குள் எழுந்தது. இதைத்தான் இளமைச் சினிமாக்கள் வெவ்வேறு வடிவங்களில், தருணங்களில் வெளிப்படுத்துகிறது. இது போன்ற உந்துதல்களின், இளவயது மனப்போராட்டங்களின் அடுத்த கட்ட வடிவம்தான் இருபாலருக்குள்ளான பாலியல் சீண்டல்களும் அதைத் தொடர்ந்து வரும் காதல்களும்.

தமிழ் சினிமாவில் சமீபத்தில்தான் இது போன்ற விடலைப்பருவத்தை முன்நிறுத்தும் சினிமாக்கள் வருகிறது என்பதும் உண்மையல்ல. பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், பாரதி வாசுவின் பன்னீர் புஷ்பங்கள் போன்றவை விடலைப் பருவ உணர்வுகளை முன்நிறுத்துபவை. அந்தக்காலத்தில் அவை சில சலசலப்புகளை உண்டாக்கின. ஆனால், இன்றைய சினிமாக்களின் அணுகுமுறை எப்படிப்பட்ட உள்வட்டங்களை நமக்குள் உண்டாக்குகின்றன?

கற்பழிப்புக் காட்சியில் கைதட்டுவதும், பாலியல் சீண்டல்களை உற்சாகமூட்டுவதும் ரசிகனின் மனநிலையை, அவனது சமுதாயப் பார்வையை கேள்விக்குறிக்கு உள்ளாக்குகிறது. இது யாருடைய தவறு?

சினிமாவை அப்படியே வரிந்து கட்டிக் கொள்ளும் தமிழனின் மனப்பாங்கிலும் பெரும் குறை இருக்கிறது. தனது தலைமுறை ஹீரோவைப் போல் ஸ்டைலாகத் தலை சீவும் அப்பாவுக்கும், 'சிம்ரன் சேல' என்று தேடிப்பிடித்து சேலை வாங்கும் அம்மாவுக்கும் பிறந்த தமிழ் குழந்தை ஜன்னல் வழியே பக்கத்து வீட்டுப் பெண்ணை எட்டிப் பார்ப்பதற்கு இளமைச் சினிமாக்கள் தான் காரணம் என்று குற்றம் சொல்வதில் என்ன தவறு? அவன் பார்த்த சினிமா அப்படிப் பட்டது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த, மணிரத்னத்தின் அலைபாயுதே படம் பார்த்துவிட்டு, அதுபோலவே கல்யாணமான கல்லூரி மாணவர்கள் எத்தனைபேர்? மக்களின் இயல்புகளைப் பார்த்துத்தான் நாங்கள் படமெடுக்கிறோம் என்பார்கள் திரைத்துறையினர். இங்கு எப்போதும் காற்று வந்ததும் கொடி அசைந்ததா கதைதான்.

அயலானைப் பார் என்று பக்கத்தில் உள்ளவர்களைக் கைகாட்டி நமது குற்றச்சாட்டுகளைச் சம்பந்தப்பட்டவர்கள் ஒதுக்கித் தள்ள முடியும். ஆனால் நாம் இன்னும் தாமிரபரணி பாயும் நெல்லைச்சீமைக்கும், மாட்டுப்பொங்கலன்று ஜல்லிக்கட்டாய் பறக்கும் மதுரைச்சீமைக்கும்தானே நமது படங்களைக் கொண்டு போகிறோம். கட்டுப்பெட்டித்தனம் என்று சிலர் சொல்லும் அந்தக் கலாச்சாரக் கோட்டிற்கு உள்ளேயே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு வாழும் விடலைப் பருவத்தினருக்கு இந்த சினிமாக்கள் தவறான ஆப்பிள்களைச் சுட்டிக்காட்டும் சாத்தான்களாக மாறலாம்.

இளைஞர்கள், இளமை, காதல் என்று இன்றைய இளந்தளிர்களுக்கு நம் தமிழ்சினிமா காட்டும் முன்னிறுத்தல்கள் எத்தகையவை? காதல் படத்தைப் பார்த்த பிறகும் சென்னைக்கு வரும் முருகன்களும், ஐஸ்வர்யாக்களும், எத்தனை ஆயிரம்? தெரியவில்லை. ரயில்வே ஸ்டேஷன்களிலும், பஸ்-ஸ்டாண்டுகளிலும் களைப்பாகக் காத்திருக்கும் 18 வயதுக்குட்பட்ட ஆண், பெண்ணைப் பார்த்தவுடன் பதைபதைப்புதான் வருகிறது. அவர்களைப் பார்த்துச் சிரித்தபடி ஜோடிஜோடியாக அணிவகுக்கின்றன வளரிளம் பருவப் பட்டாம் பூச்சிகள்.

தமிழ்சினிமாக்கள் இளம் பருவத்தினருக்கு அதிகமான இறக்கைகளைக் கட்டி, பறிக்கும் சக்தியை பறித்து விட்டதோ என்று சந்தேகம் வருகிறது நமக்கு. அடுத்த விளம்பரம் பளிச்சிடுகிறது. தேவதையைக் கண்டேன் படப் பாணியில் காதலியைப் பற்றி புகார் செய்த காதலன், காதலியின் கரம் பிடித்தார். போட்டோவுடன் செய்தியைப் படிக்கும் பெரியவர் வாய்க்குள் ஏதோ முணுமுணுக்கிறார்.

கூர்ந்து கவனித்துப் பார்த்தால் புரிகிறது, திருந்தாத சென்மங்க.

Tamil Cinema
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 02-18-2005, 11:09 PM
[No subject] - by kavithan - 02-19-2005, 01:19 AM
[No subject] - by hari - 02-19-2005, 07:01 AM
[No subject] - by kavithan - 02-20-2005, 07:51 AM
[No subject] - by tamilini - 02-20-2005, 04:31 PM
[No subject] - by KULAKADDAN - 02-20-2005, 05:29 PM
[No subject] - by tamilini - 02-20-2005, 07:43 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 11:49 AM
[No subject] - by Mathan - 03-15-2005, 01:59 AM
[No subject] - by yalie - 03-15-2005, 03:46 AM
[No subject] - by Mathuran - 03-15-2005, 03:53 AM
[No subject] - by Mathan - 03-15-2005, 03:57 AM
[No subject] - by Mathuran - 03-15-2005, 04:48 AM
[No subject] - by Kalai - 03-15-2005, 09:32 AM
[No subject] - by Mathuran - 03-15-2005, 03:48 PM
[No subject] - by yalini - 03-15-2005, 03:59 PM
[No subject] - by Mathan - 03-15-2005, 03:59 PM
[No subject] - by Kalai - 03-15-2005, 04:22 PM
[No subject] - by Mathuran - 03-15-2005, 04:36 PM
[No subject] - by tamilini - 03-15-2005, 04:39 PM
[No subject] - by Mathan - 03-15-2005, 04:59 PM
[No subject] - by Mathan - 03-15-2005, 05:02 PM
[No subject] - by Danklas - 03-15-2005, 05:05 PM
[No subject] - by tamilini - 03-15-2005, 05:22 PM
[No subject] - by tamilini - 03-15-2005, 05:23 PM
[No subject] - by Danklas - 03-15-2005, 05:36 PM
[No subject] - by Mathan - 03-15-2005, 05:37 PM
[No subject] - by tamilini - 03-15-2005, 06:33 PM
[No subject] - by Malalai - 03-16-2005, 02:54 AM
[No subject] - by tamilini - 03-16-2005, 12:46 PM
[No subject] - by KULAKADDAN - 03-16-2005, 02:49 PM
[No subject] - by Danklas - 03-16-2005, 03:06 PM
[No subject] - by KULAKADDAN - 03-16-2005, 03:10 PM
[No subject] - by ratha - 03-20-2005, 01:13 PM
[No subject] - by kavithan - 03-21-2005, 01:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)