02-28-2005, 10:14 AM
Kurumpan Wrote:விடியாத இரவு ஒன்று இல்லை
முடியாத பொருள் எதுவும் இல்லை
பேசிப்பெற நாம் கோழை இல்லை
பறிபட்டுப்போக நாம் பரதேசிகளுமில்லை!
கெஞ்சிய போதெல்லாம் அவர் மிஞ்சுவதும்
நாம் மிஞ்சும் போதெல்லாம் அவர் துஞ்சுவதும்
காலம் கற்றுத் தந்த பாடம் - இன்னும்
கண்முடிக் கிடப்பதேனோ நீயும்?!
உளியோடு போரிட்டுத்தான்
சிலை பிறக்கிறது
மண்ணோடு போரிட்டுத்தான்
விதை முளைக்கிறது
புரியாது போனது ஏனோ??
குறும்பா இனி நாம் கெஞ்சமாட்டோம் நாங்கள் பரதேசிகளல்ல கெஞ்சுவதற்கு.
நாங்கள் அதிகாலை நேரத்தில் பூபாளம் இசைக்கின்றோம் சூரியன் எழுவான் இன்னும் அதிகநேரமில்லை சில விநாடிப்பொழுதுகள்தான் இருக்கிறது. தலைவன் ஆணைகிடைக்கும்வரைதான் இந்த இருள்.
வாழ்த்துக்கள்
இந்த சந்திலை சிந்து பாடிய மழலைக்கவிக்கும் எனது வாழ்த்துக்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

