02-28-2005, 03:17 AM
அவசரமாய் பூசிய அரிதாரம்
கலையும் முன்னரே
மீண்டுமோர் அரங்கேற்றம்!
காட்சிகள் என்னவோ ஒன்றுதான்
கதா பாத்திரங்கள் மட்டுமே
முகம் மாற்றப்பட்டுள்ளது.
கதையறியாமலே கதாபாத்திரங்களாக்கப்பட்ட
கோமாளிகளே அங்கு அதிகம்
குரங்காட்டி ஒருவன்
சந்தை வந்தால்
கூட்டம் சேருவதும் - பின்
கலைவதும் புதிது அல்லவே
ஆட்டம் முடியும் வரை
கூட்டம் இருக்கும்
நட்டம் தனக்கென உணராத கூட்டம் அது!
வேடிக்கை காட்டியவனுக்கும்
வேசம் போட்டவனுக்கும்
வித்தியாசம் என்ன இருக்கு?
வந்தவரிடம் வாருவதே அவர் போக்கு
புரியாத ஜென்மங்கள்
புலம்புவதே இவர் போக்கு!
விடியாத இரவு ஒன்று இல்லை
முடியாத பொருள் எதுவும் இல்லை
பேசிப்பெற நாம் கோழை இல்லை
பறிபட்டுப்போக நாம் பரதேசிகளுமில்லை!
கெஞ்சிய போதெல்லாம் அவர் மிஞ்சுவதும்
நாம் மிஞ்சும் போதெல்லாம் அவர் துஞ்சுவதும்
காலம் கற்றுத் தந்த பாடம் - இன்னும்
கண்முடிக் கிடப்பதேனோ நீயும்?!
உளியோடு போரிட்டுத்தான்
சிலை பிறக்கிறது
மண்ணோடு போரிட்டுத்தான்
விதை முளைக்கிறது
புரியாது போனது ஏனோ??
கலையும் முன்னரே
மீண்டுமோர் அரங்கேற்றம்!
காட்சிகள் என்னவோ ஒன்றுதான்
கதா பாத்திரங்கள் மட்டுமே
முகம் மாற்றப்பட்டுள்ளது.
கதையறியாமலே கதாபாத்திரங்களாக்கப்பட்ட
கோமாளிகளே அங்கு அதிகம்
குரங்காட்டி ஒருவன்
சந்தை வந்தால்
கூட்டம் சேருவதும் - பின்
கலைவதும் புதிது அல்லவே
ஆட்டம் முடியும் வரை
கூட்டம் இருக்கும்
நட்டம் தனக்கென உணராத கூட்டம் அது!
வேடிக்கை காட்டியவனுக்கும்
வேசம் போட்டவனுக்கும்
வித்தியாசம் என்ன இருக்கு?
வந்தவரிடம் வாருவதே அவர் போக்கு
புரியாத ஜென்மங்கள்
புலம்புவதே இவர் போக்கு!
விடியாத இரவு ஒன்று இல்லை
முடியாத பொருள் எதுவும் இல்லை
பேசிப்பெற நாம் கோழை இல்லை
பறிபட்டுப்போக நாம் பரதேசிகளுமில்லை!
கெஞ்சிய போதெல்லாம் அவர் மிஞ்சுவதும்
நாம் மிஞ்சும் போதெல்லாம் அவர் துஞ்சுவதும்
காலம் கற்றுத் தந்த பாடம் - இன்னும்
கண்முடிக் கிடப்பதேனோ நீயும்?!
உளியோடு போரிட்டுத்தான்
சிலை பிறக்கிறது
மண்ணோடு போரிட்டுத்தான்
விதை முளைக்கிறது
புரியாது போனது ஏனோ??
:: ::
-
!
-
!

