02-27-2005, 11:26 PM
<img src='http://www.yarl.com/forum/files/e_gen9b.gif' border='0' alt='user posted image'>
எனக்குள் ஒரு உலகம்
எண்ணங்களும் நினைவுகளும்
எல்லாம் ஒன்றாகிட
எங்கோ
என்றோ பிரிந்த உறவுகள்
அடிக்கடி நினைவில் வர
துரோக மனங்கள்
மறக்கப்பட முடியாமல்
மறுபடி மறுபடி
மனங்களை கிழித்துச்கொள்ள
இத்தனை நினைவுகளிலும்
அழியாத பசுமையான நினைவுகள்
என்னுடன் எப்பவும்
ரணமாய் போன வாழ்வில்
காயங்கள் கொண்ட மனத்திற்கு
மருந்தாக அது தான்.
மனதை வருடிச்செல்லும்
சுகமாய் அந்த நினைவுகள்.
கிண்டலும் கேளியுமாய்.
உலகை அறியாவயதில்
உல்லாசமாய் நாம்
வாழ்வின் ரகசியம் என்னவென்று
அறியாத நிலையில்
இது தான் வாழ்வென்று
எமக்காய் எல்லைகள் போட்டு
அன்பாய் வாழ்ந்த
அந்த ஒரு சில வருடங்கள
புத்தகமும் கையுமாய்
நாங்கள் நடைபயிலாத வீதிகள் எது?
கேலி செய்யாத ஆக்கள் யார்.
அறிந்தோமா பிரிவோம் என்று
நினைத்தோமா இப்படி
எங்கெங்கோ வாழ்வோம் என்று.
நட்பும் அன்பும் இணைகையில்
எத்தனை ஆழம் என்று
அப்போது அறிந்திட காலம் இல்லை
கடந்து விட்ட ஒரு சில வருடங்கள்
தந்துவிட்ட காயங்களில்
அவைகள் மருந்தாய்
மனதினில்
அடிக்கடி எடுத்து பார்க்கும்
அல்பத்தில் படவடிவாய்
என்றும் அழிக்க முடியாது
மனங்களில் நிஜமாய்.
நட்புக்குள் இத்தனை இன்பம்
அந்த நட்பு மீண்டும்
எம்மை நாடாதா என்ற ஏக்கத்தில்
இயந்திரமயமாய் ஆகிவிட்ட
இவ்வுலகில் அடிக்கடி இல்லாவிட்டாலும்
அவ்வப்பொழுது மீட்டி பார்த்த நிலையில்
என்னுலகம் அடங்கிபோகிறது.
எனக்குள் ஒரு உலகம்
எண்ணங்களும் நினைவுகளும்
எல்லாம் ஒன்றாகிட
எங்கோ
என்றோ பிரிந்த உறவுகள்
அடிக்கடி நினைவில் வர
துரோக மனங்கள்
மறக்கப்பட முடியாமல்
மறுபடி மறுபடி
மனங்களை கிழித்துச்கொள்ள
இத்தனை நினைவுகளிலும்
அழியாத பசுமையான நினைவுகள்
என்னுடன் எப்பவும்
ரணமாய் போன வாழ்வில்
காயங்கள் கொண்ட மனத்திற்கு
மருந்தாக அது தான்.
மனதை வருடிச்செல்லும்
சுகமாய் அந்த நினைவுகள்.
கிண்டலும் கேளியுமாய்.
உலகை அறியாவயதில்
உல்லாசமாய் நாம்
வாழ்வின் ரகசியம் என்னவென்று
அறியாத நிலையில்
இது தான் வாழ்வென்று
எமக்காய் எல்லைகள் போட்டு
அன்பாய் வாழ்ந்த
அந்த ஒரு சில வருடங்கள
புத்தகமும் கையுமாய்
நாங்கள் நடைபயிலாத வீதிகள் எது?
கேலி செய்யாத ஆக்கள் யார்.
அறிந்தோமா பிரிவோம் என்று
நினைத்தோமா இப்படி
எங்கெங்கோ வாழ்வோம் என்று.
நட்பும் அன்பும் இணைகையில்
எத்தனை ஆழம் என்று
அப்போது அறிந்திட காலம் இல்லை
கடந்து விட்ட ஒரு சில வருடங்கள்
தந்துவிட்ட காயங்களில்
அவைகள் மருந்தாய்
மனதினில்
அடிக்கடி எடுத்து பார்க்கும்
அல்பத்தில் படவடிவாய்
என்றும் அழிக்க முடியாது
மனங்களில் நிஜமாய்.
நட்புக்குள் இத்தனை இன்பம்
அந்த நட்பு மீண்டும்
எம்மை நாடாதா என்ற ஏக்கத்தில்
இயந்திரமயமாய் ஆகிவிட்ட
இவ்வுலகில் அடிக்கடி இல்லாவிட்டாலும்
அவ்வப்பொழுது மீட்டி பார்த்த நிலையில்
என்னுலகம் அடங்கிபோகிறது.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

