02-27-2005, 06:51 PM
ஹோமோ செக்ஷவல்,/லெஸ்பியன் ???????? (தொடர்ச்சி)
பெட்டை, கறுப்பி, உருப்படாதது நாராயணன் இவர்களின் வலைப் பதிவுகளைப் படித்ததும், சமீபத்தில் காதில் விழுந்த இரு சிறுமிகளின் கதையையும் கேட்டதும் தான், இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன். இன்று வெங்கட், கண்ணன், ஷ்ரேயா களத்தில் குதித்துவிட்டார்கள். மொத்தமாய் பதில் சொல்லி விடுகிறேன் -
பள்ளியில் அந்த பெண்கள், வகுப்பு முடிந்ததும் கட்டி பிடித்துக் கொண்டு முத்தமிட்டுவிட்டுதான் பிரிகின்றனவாம். என் மனம் அவர்களின் சொந்த விஷயம் என்று சொன்னாலும், மகளிடம் அந்த பெண்களின் சகவாசமே வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறேன். நம்மை பாதிக்காவிட்டால் சரி என்ற ஒரு சாதாரண மத்திய வர்க்கத்தின் கோழை மனப்பான்மை, பயம்தான். இங்கு மறுமொழி சொன்னவர்களின் படிப்பறிவு, இருக்கும் இடமும், பழகும் மக்களும், இயங்கும் தளமும் என்னை விட பலப்படி மேலானது. ஒரு டீன் ஏஜூம், இன்னொன்று டின் ஏஜ்ஜூல் நுழைந்துக் கொண்டு இருக்கும் குழந்தைகளை வைத்துக் கொண்டு, இன்னும் பழைய சித்தாந்தப்படி வாழும் ஒரு பெண்ணின் பயமே இந்த பதிவு. அமெரிக்காவில் இருந்தாலும், சென்னையில் இருந்தாலும் இதைத்தான் சொல்லுவேன்.
திரும்ப, திரும்ப என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்று, தற்காலிக தீர்வாய் இப்படி நடந்துக் கொள்ளுவது, மீடியாக்களின் கைங்கரியமா? இல்லை என்று சொல்பவர்களுக்கு, சினிமா போன்ற மீடியாக்களைப் பார்த்து சில விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று ராகவேந்திரரும், அண்ணாமலையார் கோவில் பிரபலம் ஆனதிற்கு யார் காரணம்? ராதிகா போடும் தாலி சங்கிலியில் முகப்பு வைத்துப் போடுவதைப் பார்த்து நம் ஊரில் அப்படி போடாத தாய்குலத்தை விரல் விட்டு எண்ணி விடலாம். குஷ்பூ போடும் ரவிக்கையை, தேடி, தேடி அலையும் கும்பலை பாண்டிபஜாரில் இன்றும் காணலாம். அட்டை கத்தி வீரமும், வாய் பந்தல் வசன சினிமாவையும் வைத்து ஆட்சியையே பிடிக்கவில்லையா? எண்பதுகளில் வெளி வந்த அலைகள் ஓய்வதில்லை, கன்னுகுட்டி காதலையும், கிளிஞ்சல்கள், மரோ சரித்திரா போன்ற படங்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்துக் கொள்ளுவதையும் சொல்லி தரவில்லையா?
காமம் என்பதை கண்டுக்காமல் விட்டு விட்டால், நீறு பூத்த நெருப்பாய் அடங்கியிருக்கும். தீனிப் போட ஆரம்பித்தால் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கும். சுய கட்டுப்பாட்டை குழந்தைகளுக்கு இதை சொல்லி தர வேண்டும் என்பது என் எண்ணம். சுய பழக்கங்களும், ஓரின பழக்கமும் தவறில்லை என்று சொல்ல ஆரம்பித்தால், எல்லாமே தவறில்லை என்ற எண்ணம் வராதா? இந்த என் எண்ணம் சரியா தவறா?
கமலஹாசன் போன்ற பெரிய ஆட்களின் தனிமனித ஒழுக்கம் பற்றி சொல்லப்பட்டது. அது சமூகத்தில் பெரிய மனிதர்களின் பொதுவான குணம். ஆனால் மத்திய வர்க்கத்தில் கணவன், மனைவி,பிள்ளைகளுக்கு இதுதான் வாழ்க்கை முறை என்று எழுதப்படாத சட்டம் உள்ளது. ஒருவர் தவறினாலும் அது எல்லாரையும், ஏன் குடும்பத்தில் கூட பிறந்தவர்கள், மச்சான், மச்சினையைக்கூட பாதிக்கும். செக்கு மாடு வாழ்க்கைதான். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், என் விருப்பப்படிதான் வாழுவேன் என்பவர்களை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுவதில்லை. எல்லாரும் நாடகமாடிக்கொண்டு, வாய் பேச்சில் சவடால் விட்டுக் கொண்டும் பொய் வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் என்று சில அறிவுஜீவிகள் குற்றம் சாட்டலாம்,. ஆம், அது உண்மைதான். குடும்பத்துடன் இணைந்து வாழ அப்படி ஒரு முகமூடி தேவைத்தான் இல்லை என்றால் ஹிப்பியாகவோ அல்லது காட்டிலோ போய் உட்கார்ந்துக் கொள்ள வேண்டியதுதான்.
கண்ணன் சாரும் தன் பங்கிற்கு பல கேள்விகளைக் கேட்டுள்ளார். கல்யாணம் மிக தேவைத்தான். ஆட்டம் போடும் ஆண்கள் எல்லாம், ஒரு காலக்கட்டத்தில் மனைவி சொல்லே மந்திரம் என்று அடங்கிவிடுகிறார்கள். வயது, இளமையும் இருக்கும்வரையில் எவ்வளவு வேண்டுமானாலும் ஆடலாம். நான் யாருக்கும் அடங்க மாட்டேன் என்று தன் போன போக்கில் திரிந்தவர்களின் கடைசி காலம் பரிதாபத்துக்குரியதாகிவிடுகிறது. ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு சலிப்பு என்கிறீர்கள், காரணம் எதிர்பார்ப்புகள். மனைவியோ, கணவனோ மற்றவர்களை மதித்து வாழ்ந்தால் வாழ்க்கை என்றுமே இனிக்கும். கொஞ்சம் வம்பு, சண்டை, பிறகு ஊடல், பின்பு கூடல் என்று வாழ்க்கைப் போய் கொண்டு இருக்கிறது. நேற்று நடந்ததை நினைத்து குற்றமனப்பான்மையுடன் வாழாமல், நாளைய தினத்தை நினைத்து கனவுகளை, கற்பனைகளையும் வளர்த்துக் கொள்ளாமல், இன்று இந்த நிமிடம் சந்தோஷ மனத்துடன் இருந்தால் போதும்- ரஜனீஷ் சொன்னது.
ஒரு சமூகத்தில் வாழும் பொழுது, சில கட்டுப்பாடுகள் அவசியம். சில பொய்கள், சமரசங்கள் வாழ்க்கையை இனிமையாக்குகின்றன. முன்பு சி·பி வெங்கடேஷ் எழுதிய "நன்றி சுனாமி" பலராலும் வெகுவாய் அலசி ஆராயப்பட்டது. ஜெயமோகன் அவர்களும் பிராமண மத்தியவர்க்கத்தின் மனநிலைமை இது என்றார். ஆனால் இதில் குல வித்தியாசம் எதுவுமே எனக்கு தெரியவில்லை. நாளையதினத்தைக் குறித்து கவலைப் படும் அனைத்து இன, குல மத்தியமரின் சுயநலமான மன நிலைமைத்தான் அது.
வயதிற்கு வருவதற்கு முன்பு கணவனை இழந்த என் உறவு பெண் ஒருவர், பிறகு படித்து ஆசிரியை ஆகி, கூட வேலை செய்யும் வேறு சாதி ஆசிரியருடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரை யாரும் எதுவும் சொல்லவில்லை. அவள் உணர்வுகளை மதித்தார்கள். எல்லா வீட்டு விசேஷங்களிலும் அவர் கலந்துக் கொள்வார். இரண்டு வருடத்திற்கு முன்பு எண்பதாவது வயதில் காலமானார். இதை தவறு என்று சொல்லாத மத்திய வர்க்கம் ரோமியோ அஜீத்துக்கு ஷாலினி கிடைத்ததுப் போலவோ அல்லது குஷ்பூ, ராதிகா போலவோ வாழ்க்கை அமைத்துக் கொள்ள ஒரு பொழுதும் இடம் தராது. இதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓரே நியதி.
கண்ணன் சார், என் தைரியத்தைப் பாராட்டியிருக்கிறார். இனி நிஜமாகவே தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டியதுதான். எல்லாரும் எல்லா விஷயமும் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பொதுவில் செல்ல பெண்கள் பயபப்டுகிறார்கள். காரணம் இத்தகைய ஆழமான அல்லது சர்ச்சைக்குரிய விஷயங்களை பெண்கள் பேசினால், பல ஆண்களுக்கு பிடிப்பதில்லை. பெண்களை எந்த விஷயத்தில் தாக்கினால், சுருண்டு விழுவார்கள் என்பது அவர்களுக்கு அத்துப்படி.
பெண்களின் மன உணர்வுகளை இதுவரை யாருமே சரியாய் வெளிப்படுத்துவதியதில்லை என்று நினைக்கிறேன். மங்கையர் மலரைப் போல புடைவை, நகை அல்லது பக்தி போன்றவை எழுதுகிறார்கள். இன்னொரு புறம் பெ·மீனா போல, பெண்ணுரிமை என்ற பெயரில் வறட்டு தத்துவம். பெண்கள் பேச்சு, ஆண்கள் பேச்சு என்று எந்த வித்தியாசமும் இல்லை. வானத்தின் கீழ் இருப்பவை அனைத்து அலசி,
தோய்த்து பிழிந்து காய வைக்கப்படும். ஒரு அழகான பெண், அவளின் உடல் அழகு, கூந்தல், நிறம் போன்றவற்றை ரசிக்கும், பாராட்டும் முதல் நபர் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள். பிற பெண்களின் ஏதாவது ஒரு அழகு அதிகமாய் இருந்தால், பார்க்கும் பெரும்பாலானப் பெண்கள் அதை பாராட்டி ஒரு வார்த்தையாவது சொல்லி விடுவார்கள்.
ஆனால் நான் இணையத்தில் எழுத ஆரம்பித்த நாளில் இருந்து, பல்வேறுவிதமான தாக்குதலை எதிர்க் கொண்டாலும், அனைத்துமே நேர்மையாய் நடந்தவைதான். திட்டினாலும் முகமூடி அணியாமல் நேராய் நீ எழுதியது தவறு என்றுத்தான் சொன்னார்கள். பின்னால் என்ன பேசினார்கள் அல்லது பேசப் பட்டது என்பது எனக்கு தெரியாது :-)). ஒரு வேளை ஆரம்பம் முதல் சண்டைக்காரி என்ற பெயர் எடுத்ததாலோ என்னவோ? இதுவரை பெரிய பிரச்சனை எழவில்லை.
கண்ணன் சார், உங்களின் கடைசி கேள்விக்கு பதில்- ஒன்றிரண்டு காதில் விழுந்துள்ளது. இதிலும் ஆண் என்ன பெண் என்ன?
தோழியர் கூட்டு வலைப் பதிவு ஆரம்பித்தப் பொழுது, தோழிகளிடம் அழகு, சமையல் குறிப்பு, கோலம் என்றுப் போட்டு இன்னொரு மங்கையர் மலர் ஆக்கிவிடாதீர்கள் என்று சொன்னேன். அதேப் போல வரட்டு பெண்ணுரிமை பேசுவதிலும் எனக்கு விருப்பமில்லை. இன்று மீனா, செல்வநாயகி இருவரும் சுவாரசியமாய் பல்வேறு விஷயங்களை எழுத ஆரம்பித்துள்ளனர். தனிக்குடித்தனம் போனவர்களே, கொஞ்சம் இங்கும் ஏதாவது- தோழியர்களுக்கு என்று ஸ்பெஷலாய் ஏதாவது எழுதிப் போடுங்களேன்.
நிறைய விஷயங்கள், விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள். எல்லாருக்கு நன்றி!
ராமச்சந்திரன் உஷா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>