02-27-2005, 09:54 AM
நேரான கொக்கியை உபயோகப் படுத்து
முன்பொரு காலத்தில் சைனாவில் ஒரு மனிதன் நேரான கொக்கியை உபயோகித்து நாற்பது வருடங்களுக்கு மீன் பிடித்து வந்தான்.
யாராவது அவனிடம் "ஏன் நீ வளைந்த கொக்கியை உபயோகப் படுத்தக் கூடாது?" என்றுக் கேட்டால் "ஒருவனால் சாதாரண மீனைத் தான் வளைந்த கொக்கியை உபயோகப் படுத்தி மீன் பிடிக்க முடியும், ஆனால் நான் நேரான கொக்கியை உபயோகப் படுத்தி மிகச் சிறந்த மீனைப் பிடிக்கப் போகிறேன்" என்று பதில் கூறுவான்.
இந்த விஷயம் ஊர் ஊராக பரவி கடைசியில் பேரரசர் காதில் விழுந்தது. மன்னன் தானே சென்று அந்த முட்டாள் மீனவனைப் பார்த்தான். மன்னன் மீனவனைப் பார்த்து "நீ எந்த மீனைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்?" என்றுக் கேட்டான்.
மீனவன் "மன்னா, நான் உங்களைத் தான் பிடித்துக் கொண்டிருந்தேன்" என்றான்.
நன்றி
http://zendaily.blogspot.com/