Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் ஆட்சேபம்
#1
நலன்புரி நிலையங்களில் படையினர்
தங்குவதற்குப் புலிகள் ஆட்சேபம்
எரிக் சொல்யஹய்மிடம் நேரில் தெரிவிப்பு
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கின்ற நலன்புரி முகாம் களிலும் இடைத்தங்கல் நிலையங்களிலும் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது குறித்து விடுதலைப் புலிகள் தங்கள் ஆட்சேபத்தை வெளியிட்டிருக்கின்றனர்.
நேற்று அம்பாறைக்கு விஜயம் செய்த நோர்வேயின் விசேடதூதர் எரிக் சொல்யஹய்மிடம் புலிகள் தமது இந்த ஆட்சேபனையை நேரில் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகளின் மட்டு.- அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளந் திரையன், துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் குயிலின்பன், மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி, மட்டு. மாவட்ட துணைத்தளபதி பிரபா, மாவடி முன்மாரிக் கோட்டத் தளபதி ரமணன் ஆகி யோர் நேற்று எரிக் சொல்யஹய்முடன் பேச்சு நடத்தினர்.
நலன்புரி நிலையங்களில் படையினர் நிலைகொண்டிருப்பதை எரிக் சொல்யஹய் மிடம் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சுனாமி அனர்த்த நிவாரணப் பணிகள் ஜனாதிபதியால் இராணுவ அதிகாரிகளின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதே படையினரின் தலை யீட்டுக்கு வழிவகுத்துள்ளது.
இதனால், நிவாரணப் பணியாளர்களும் தொண்டு நிறுவனங்களும் இடையூறுகளைச் சந்திக்க நேரிடுவதாக விடுதலைப் புலிகள் சுட்டிக் காட்டினர்.

உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
புலிகள் ஆட்சேபம் - by Vaanampaadi - 02-27-2005, 09:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)