02-27-2005, 09:14 AM
விடுதலைப்புலிகளை சந்திப்பதா?- இங்கிலாந்து இளவரசருக்கு இலங்கை அரசு எச்சரிக்கை
<img src='http://www.dailythanthi.com/images/news/20050227/charles.jpg' border='0' alt='user posted image'>
புதுடெல்லி, பிப்.27_
இலங்கை வெளியுறவு மந்திரி லட்சுமண் கதிர்காமர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:_
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை (திங்கட்கிழமை) இலங்கையில் சுனாமி பாதித்த பகுதிகளை பார்வையிட கொழும்பு நகருக்கு அதிகாலை 6 மணிக்கு வருகிறார். இந்த பயணத்தின் போது அவர் விடுதலைப்புலிகளை சந்தித்தால் அது மிகப்பெரிய குற்றமாகும். ஏனென்றால் இங்கிலாந்து நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஒன்று. அதனால் இளவரசர் சார்லஸ் விடுதலைப்புலிகளை சந்தித்தால் அது பெரிய குற்றமாக கருதப்படும்.
ஐ.நா. சபை செயலாளர் கோபி அனன் கடந்த மாதம் இலங்கை வந்தார். இலங்கையின் தென் பகுதியில் சுனாமி பாதித்த பகுதிகளை அவர் பார்வையிடச் சென்றபோது, விடுதலைப்புலிகள் அதிகமாக உள்ள பகுதியில் சுனாமி பாதித்த பகுதிகளை அவர் பார்க்கவில்லை. இளவர சர்சார்லசின் இலங்கை பயணத்தில் விடுதலைப்புலிகளை சந்திக்கும் திட்டம் இருப்பதாக எங்களுக்கு தகவல் எதுவும் இல்லை.
இவ்வாறு இலங்கை வெளியுறவு மந்திரி லட்சுமண் கதிர் காமர் கூறினார்.
விடுதலைப்புலிகள் இயக்க அமைதி பேச்சு வார்த்தை செயலக செக்ரட்டரி ஜெனரல் புலிதேவன் கூறியதாவது:_
இலங்கை வரும் இளவரசர் சார்லசை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரை எப்போதும் நாங்கள் வரவேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை வெளியுறவு மந்திரி லட்சுமண் கதிர்காமர் மேலும் கூறியதாவது:_
விடுதலைப்புலிகளுடன் மீண்டும் உடனடியாக அமைதிபேச்சு வார்த்தையை புதுப்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை. அமைதி பேச்சு வார்த்தை கடந்த 20 மாதங்களுக்கு முன்பே முறிந்து விட்டது. சுனாமி பாதித்த பகுதி களை விரைவாக சீரமைப்பது தான் முதல்கட்ட வேலை என்பதை விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் தெளிவாக உணர்ந்துள்ளன.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சுனாமி பாதித்த பகுதிகளுக்கு இலங்கை அரசு எந்த நிவாரண உதவியும் செய்யவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பல டிரக்குகளில் நாங்கள் ஏராளமான நிவாரண பொருட்களை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்தோம். அதை அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல அவர்கள் விரும்பவில்லை. சுனாமி நிவாரண பணிகளை அரசுடன் இணைந்து தான் செய்ய முடியும் என்ற முக்கியத்துவத்தை விடுதலைப்புலிகள் உணர்ந்து விட்டார்கள். நன்கொடையாளர்களும், விடுதலைப்புலிகளுக்கு தனியாக எந்த உதவியும் அதிகமாக அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Maalaimalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>