Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் பகுதிக்கு செல்லும் ஜநா செயலர்
#13
பேச்சை உடன் ஆரம்பிக்க மேற்குலக நாடுகள் அழுத்தம்

அரசாங்கத்திற்கும் ஜே.வி.பி.க்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்துவரும் இந்நிலையில், சமாதானப் பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்க கோரி அமெரிக்காவும் அதன்நேச நாடுகளும் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதனால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் கடும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்குலக நாடுகளின் கடும் அழுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால் ஆட்சியிலிருந்து விலகப் போவதாக ஜே.வி.பி.யின் தலைமை பகிரங்க எச்சரிக்கை விடுத்திருப்பதையடுத்தே இந்த அரசியல் நெருக்கடிக்குள் ஜனாதிபதி சந்திரிகா சிக்கியுள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்காது விட்டால், அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறிவடையச் செய்து மீண்டும் போர் ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடுமென்றும் அவ்வாறு போர் மூண்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென்றும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மூலமாகவே இந்த எச்சரிக்கையுடன் கூடிய அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், நோர்வே, கனடா, இத்தாலி போன்ற நாடுகளே தற்போது இலங்கை விவகாரத்தில் கூடிய கவனமெடுத்து வருவதாகவும் அதன் ஒரு கட்டமாகவே இலங்கை அரசாங்கத்திற்கு இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில், கடும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கும் ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தையும், தனது நிறைவேற்று அதிகாரத்தையும் பயன்படுத்தி நிலைமையை சமாளிக்க முயற்சிக்கக் கூடுமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


--------------------------------------------------------------------------------
வீரகேசரி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-05-2005, 03:15 PM
[No subject] - by Mathan - 01-05-2005, 03:19 PM
[No subject] - by anpagam - 01-05-2005, 05:28 PM
[No subject] - by sinnappu - 01-05-2005, 09:46 PM
[No subject] - by sethu - 01-05-2005, 09:58 PM
[No subject] - by தமிழரசன் - 01-06-2005, 07:12 AM
[No subject] - by sinnappu - 01-06-2005, 02:18 PM
[No subject] - by sinnappu - 01-06-2005, 03:33 PM
[No subject] - by Mathan - 01-07-2005, 03:36 AM
[No subject] - by Mathan - 01-17-2005, 04:25 PM
[No subject] - by Mathan - 01-18-2005, 04:15 AM
பேச்சை உடன் ஆரம்பிக்க மேற்குலக நாடுகள் அழுத்தம் - by eelapirean - 02-27-2005, 04:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)