Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேசாப் பொருள் - பால் உறவுகள்
#9
தற்பால் நாட்டம்

ராமச்சந்திரன் உஷா இன்றைய வலைப்பதிவில் ஹோமோஷெக்வல்/லெஸ்பியன் என்ற தலைப்பிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். சில ஆணித்தரமான கருத்துக்களையும் முன்வைத்துள்ளார். அதை முன்வைத்து சில எண்ணங்கள்;

<i>உஷா சொல்லியிருப்பது

ஆனால் உடல் திமிர் பிடித்து ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது எவ்வகையில் சரி? பத்திரிக்கைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் இப்படியும் இருக்கலாம் என்று தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இவை சமூக சீரழிவு என்று குற்றம் சாட்டுகிறேன். அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, நாளை ஊர் முன்னால் சாதாரணமாக திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும், ஒரு சேஞ்சுக்கு பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து, தன் துணைக்கு துரோகம் செய்கிறார்கள். </i>

மதி கருத்துப் பகுதியில் சொல்லியிருப்பதைப் போல கனடாவிலோ, அமெரிக்காவிலோ வசிப்பராக இருந்தால் இதைவிட இன்னும் கடுமையான வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். இனி, உஷா சொல்லியிருப்பதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இது தற்பாலர்களைக் குற்றம் சாட்டுபவர்கள் வழக்கமாக கூறும் அதே வார்த்தைகள்தான். இங்கே எவ்வளவு குழப்பம். இருக்கிறது.

"ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக்கொண்டு" - ஒருவரையொருவர் என்று வந்தவுடனேயே இதில் தவறு இல்லை என்றாகிவிடுகிறதல்லவா? ஒருவர் மற்றவரை என்றிருந்தால் வேண்டுமானால் ஏமாற்றப்பட்டவருக்கு ஆதரவாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது. மனமொத்து இருவர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதில் ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை. (என்னுடைய நண்பன் ஒருவன் திருமணமே இப்படித்தான் என்று சொல்வான்).

அப்படி ஒருவர் ஏமாற்றப்பட்டிருந்தால், இது வழக்கமான கற்பழிப்பு, ஏமாற்றல் போன்ற அதே எல்லைக்குள்ளே வந்துவிடும். இதைக் கையாள, தீர்ப்பு சொல்ல தற்பால் சமாச்சாரம் தேவையில்லை.

"அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும்" - சின்னவீடு வைத்துக்கொள்வதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மீண்டும் அதே எல்லைக்குள்ளே நிறுத்தி இதை விவாதித்தால் போதும். தற்பால் சமாச்சாரம் தேவையில்லை.

"பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து" - இதற்கு ஒரு விசேடப் பெயர் இருக்கிறது. இருபால்நாட்டம் (Bisexuality). இது வரையறையிலேயே கற்பு என்ற சமாச்சாரத்தைக் கீழேபோட்டுமிதித்துக் கொண்டு நிற்பது. இதைப்பற்றிய தீர்ப்புகளுக்கு "பலதாரம்" (Polygamy) - பார்த்தீர்களா, polygamy என்று எளிதாக மேற்கத்தியர்கள் சொல்வதற்கு நாம் 'தாரம்' என்ற திருமணம் சார்ந்த பிரயோகத்தை நாடி நிற்க வேண்டியிருக்கிறது. பல்இணைநாட்டம் கொண்டவர்களுக்கு நம் சமூகத்தில் என்ன மதிப்பு கொடுக்கிறோமோ அதே மதிப்பை இருபால்நாட்டம் கொண்டவர்களுக்கும் தரலாம்

இங்கே நான் உஷா சொல்லியிருப்பதை வார்த்தைக்கு வார்த்தை வெட்டி வாதிடமுற்படவில்லை. பொதுவில் தற்பாலர்களைச் சுட்டுப் பொசுக்கவேண்டும் ரீதியில் பேசுபவர்கள் எல்லோருமே இப்படித்தான் குழப்பமாக எல்லா விழுமியங்களையும் அவர்கள் மீறுவதாக மேம்போக்காகச் சொல்லிவிடுவார்கள்.

* * *

நம்முடைய சமூகம் சார்ந்த சில விழுமியங்களைப் பார்ப்போம். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெமினிகனேசன், கமலஹாசன், குன்னக்குடி வைத்தியநாதன் என்று தொடங்கி வரிசையாக நம் சமூகத்தின் 'தலைமகன்கள்' இருக்கிறார்கள். இவர்களை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம், இந்த சமாச்சாரத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆராதிக்கிறோம். பிரபலங்களை விடுத்து எல்லோருடைய சொந்ததிலும் கொஞ்சம் தேடிப்பார்த்தால் யாராவது ஒரு 'வீரியமுள்ள் ஆண்மகன்' இருப்பார். இதை ஆண்கள் மாத்திரமல்லாது பெண்களும் போற்றுவதையும் பார்த்திருக்கிறேன். இவர்களால் கெட்டுப்போகாத நம் சமூகம் 'ஒழுக்கமாக' ஒற்றைத் தற்பால் துணையுடன் வாழும் ஆண்களாலோ, பெண்களாலோ கெடப்போவதில்லை என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

தற்பால் சமாச்சாரத்தை வைதீக இஸ்லாமியர்கள், கத்தோலிக்கர்கள் எதிர்க்கும் தீவிரத்துடன் இந்துக்கள் எதிர்க்க முடியாது ஏனென்றால் நம் எண்ணிலடங்காத புராணங்களில் எல்லாவற்றுக்குமே எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. பலதாரத்தை ஆதரிக்கும் இஸ்லாமியர்கள் இந்த இடத்தில் உறுதியாக இருப்பதைப் பார்க்கலாம்.

எனக்குத் தெரிந்து இங்கே பல தற்பாலர்கள் ஒழுக்கத்தோடும், கண்ணியத்தோடும் இருக்கிறார்கள். என் மனைவியின் அலுவலில் அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் பெண் அப்படிப்பட்டவர்தான். எனக்கு அடுத்த நாற்காலியில் உட்காரும் புண்ணியவானுக்கு கல்யாணம் ஆகி, அவர் பையனுக்கு இன்னும் ஒரு வருடத்தில் கல்யாணம் ஆகப் போகிறது. ஆனால் அவர் கைவைக்காத இடம் கிடையாது (இவருக்கு மற்றவர்கள் முன்னால் 'கைவைப்பதில்' கூடுதல் ஆர்வம். ஒரு விசேடம் என்னவென்றால் இவர்கூட தற்பாலர்களையெல்லாம் வரிசையில் நிற்கவைத்துச் சுடவேண்டும் என்று சொல்வார். என்னுடைய அந்தரங்கங்கள் பற்றி நிறைய கேள்விகளைத் தயக்கமில்லாமல் கேட்பார். இதற்கு வேண்டா வெறுப்பாக நான் சொல்லும் விடைகள் (திருமணத்திற்கு முன்பு எனக்கிருந்த தொடர்புகள் (இல்லாத என்று படிக்கவும்), இப்பொழுது நான் செய்யும் (செய்யாத என்று படிக்கவும்) மேலதிக சில்மிஷங்கள்) எதிலுமே இவருக்கு நம்பிக்கையில்லை. எனென்றால் இவர் தன்னைப்போலவே பிறரையும் பார்ப்பவர்.

மறுபுறத்தில் என் மனைவியின் நண்பியை நான் சந்தித்திருக்கிறேன். அவருக்கு எனக்கும் என் மனைவிக்கும் இடையிலிருக்கும் பரஸ்பர புரிதல்கள் மீது முழு நம்பிக்கையிருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்!

* * *

சிலபேர் இயற்கையிலேயே அப்படித்தான், அவர்களை நான் சொல்லவில்லை. ஊடகங்களைப்பார்த்துக் கெட்டுப்போனவர்களைத்தான் - ரீதியில் சப்பைக்கட்டுகளும் வழக்கமாக வருவதுதான். ஆனால் தீர்ப்பென்னவோ ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும்தான். இவர்கள் ஒட்டுமொத்தமாக தீர்ப்புகளை வழங்குவது இயற்கையிலேயே உளவியல்/உடற்கூறியல் ரீதியாக மறுபாலர்களிடம் நாட்டமே இல்லாதவர்களையும் பாதிக்கிறது என்பதை பலர் அறியமாட்டார்கள்.

மறுபடியும் - அப்படி ஊடகங்களைப்பார்த்து தற்பால் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை - சினிமா பார்த்துவிட்டுக் கொலைசெய்பவர்கள், பத்திரிக்கையில் கற்பழிப்பு செய்தியைப் படித்துவிட்டுக் கற்பழிப்பவர்கள் இன்னபிறர்களுக்கு என்ன மரியாதை/தண்டனை தருவீர்களோ அதே ரீதியிலேயே கையாளலாமே. இந்த இடத்தில் தற்பாலர் என்று ஏன் தனித்துப் பார்க்கவேண்டும்.

* * *

தவறான புரிதல்களின் காரணமாக திருமணத்தில் நிர்ப்பந்திக்கப்பட்டு தங்கள்/பிறர் வாழ்க்கையைச் சீரழித்தவர்கள் (சீரழிக்கத் தூண்டப்பட்டவர்கள்) பலரை எனக்குத் தெரியும். இதேபோல பிரபலங்களுக்கு மத்தியிலும் உண்டு. கணினிகளுக்கு வித்திட்ட அலன் டூரிங், ஓவியர் பூபேன் காக்கர் இவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டர்கள் என்று என்னுடைய பழைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

இனி முக்கியமான கேள்விக்கு வரலாம். சமீபத்தில் ஏன் இவர்களது எண்ணிக்கை/நடவடிக்கை அதிகரித்திருக்கிறது?

இந்தியாவில் என்னுடன் கூட கல்லூரியில் படித்த நண்பனின் தகப்பனார் (அப்பொழுது அவருக்கு 55 வயது) ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லோருடைய ஆடைகளுக்குள்ளும் இருப்பதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்படுபவர். இவரைப்போல பலரை வைதீக குடும்பங்களுக்குள்ளே நானே சிறுவயதில் கண்டிருக்கிறேன். என் நண்பரின் அப்பாவைப் பற்றி எங்கள் வட்டாரங்களிலேயே நாங்கள் மறைமுகமாக ஒருவரையொருவர் எச்சரித்துக் கொள்வோம். இப்பொழுது ஊடகங்களின் பெருக்கத்தின் காரணமாக எல்லா தகவல்களும் பெருகியோடுவதைப் போல இந்தத் தகவல்களும் பெருகியோடுகின்றன. அவ்வளவுதான். இதில் எண்ணிக்கை அதிகரிக்கிறது, குறைகிறது என்றேல்லாம் சொல்ல முடியாது (சும்மா கையைக் காட்டிப் பேசலாமேயொழிய தரவுகள் கிடையாது).

வெறும் உளிவைத்துச் செதுக்குவது மாத்திரமே 'மீடியா'வாக இருந்த காலத்திலேயே நம்மூர் கோவில்களில் இதெல்லாம் நிறைய செதுக்கிவிட்டார்கள். எனவே 'மார்டன் மீடியா'-வை மாத்திரம் குறைசொல்ல முடியாது.

<i>இனி அதைவிட முக்கியமான கேள்வியொன்று மீதமிருக்கிறது? அதைக் கேட்டவர் கார்த்திக் ராமாஸ்

ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. "பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா" என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது. </i>

இதற்கான பதிலைப் பின்னர் எழுதுகிறேன். (இப்பொழுது நேரம் போதவில்லை).

venkat
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-27-2005, 02:33 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:37 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:40 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:44 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:46 AM
[No subject] - by shiyam - 02-27-2005, 03:08 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 04:23 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 04:28 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 11:42 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 06:51 PM
[No subject] - by KULAKADDAN - 02-27-2005, 08:59 PM
[No subject] - by tamilini - 02-27-2005, 09:17 PM
[No subject] - by KULAKADDAN - 02-27-2005, 09:28 PM
[No subject] - by Mathan - 02-27-2005, 09:36 PM
[No subject] - by tamilini - 02-27-2005, 09:41 PM
[No subject] - by Mathan - 02-27-2005, 10:40 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 03:15 AM
[No subject] - by shobana - 03-01-2005, 07:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)