Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேசாப் பொருள் - பால் உறவுகள்
#4
//ஆனால் உடல் திமிர் பிடித்து ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது எவ்வகையில் சரி? பத்திரிக்கைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் இப்படியும் இருக்கலாம் என்று தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன.//

இதோடு முழுதாய் ஒத்துப்போக முடியவில்லை. முதலில் ஆணோடு ஆண் சேர்ந்து வாழ்வது
உடல் திமிர் என்று நீங்களே வரையறுக்கொண்டால் ஒன்று செய்யமுடியாது. பெரும்பாலான சமயங்களில்
இதற்கான தேவை உளவியல் காரணங்களால்தான் எழுகிறது. அல்லது [இக்கரையிலிருந்து ] நம் பார்வையில் மனப்பிறழ்வு அல்லது மனத்திரிபு.

Posted by: karthikramas at February 25, 2005 04:08 PM

ஒரு நல்ல விவாதம் சாத்தியமாகலாம் என்பதாலும், உங்கள் போல் பலர் பிறழ்ந்த (?) கருத்துக்களில் இருக்கலாம் என்பதாலும், வாசிக்க உதவும் என்பதாலும் மேலே சொன்ன சுட்டியில் உள்ளவற்றை இங்கு போடுகிறேன்.

================================
பையனுக்கு மாப்பிள்ளையும், பெண்ணுக்கு மணப...

சமீபத்தில் ராயர் காப்பி கிளப்பில் ஓரினச் சேர்க்கை திருமணம் குறித்து
வேறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. அதெல்லாம் இருக்கட்டும் தி எல் வோர்ட் (The L word) என்றொரு தொலைக்காட்சித் தொடர் வருகிறதே பார்த்தீர்களா?
என்னங்க அதப் பாக்கலன்னா எப்பிடி? நிறைய பேர் அதை பார்த்தால் தன் கருத்தை
மாற்றிக்கொள்வார்கள். மாற்றி கொள்வார்களோ இல்லையோ தொடர்ந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். சும்மா சொல்லக் கூடாது சார் அட அடா!! என்னமா இயக்கி இருக்கிறார்கள் தொடரை. தொடர் முழுக்க சூடு தாங்கல. ஒவ்வொரு பாத்திரமும் கவர்ச்சியா நடிக்க வைத்து நம்மை யெல்லாம் சொக்க வைக்கிறாங்க.

இதெல்லாம் நான் சொல்லவில்லை ;-), ஒரு ரிவியூவில் படித்தேன். ஒரிரண்டு நாட்கள் பார்க்கவும் செய்தேன். பிடித்திருந்தது நடித்த பெண்களை.

சரி விஷயத்துக்கு வருவோம். ராயர்களில் சிலர் ஒரின சேர்க்கை திருமனத்தை ஆதரித்தனர். இவர்களில் பத்ரி,டைனோ போன்றவர்கள் மனிதாபிமானத்தைக் மேற்கோளிட்டு மடல்களை எழுதியிருந்தனர். ரூமியோ "சொல்வது மாதிரி எழுதியிருந்தார். இவரது கேள்வி உண்மையில் இது முறையானதா? உபயோகமுள்ளதா? என்பதுதான். நான் சில மடல்களை மட்டுமே படித்தேன். மற்றவைகளை படிப்பேன்.

கேள்விகளும் சிந்தனைகளும் பின்வருமாறு :
-----------------------------------
1. ஓரினச் சேர்க்கை முறை? சரியா? ஒத்துக் கொள்ளப்படவேண்டியதா? முட்டாள்த்தனமா?
2. ஓரினச் சேர்க்கையில் இன்பம் விளைவது உண்மையா?
3. அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டியது சரியாகுமா? சமூக அங்கீகாரம் தரத் தகுதியானதா?
4. ஓரினச் சேர்க்கையின் மீது நாம் கொள்ள வேண்டிய சரியான பார்வையெது?


1. நமது பழக்கங்கள் அனைத்தும் நாம் இந்த சமூகத்தில் இருந்து பெற்றுக் கொண்டவை. அதாவது
இந்த சமூகத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு நாம் ஒத்துக் கொண்டு கற்றுக் கொண்டவை. எப்படி திருடுதல் கூடாது, கொலை கூடாது என்று கற்றுக் கொண்டோமோ அப்படியேதான் ஓரினச் சேர்க்கை வித்தியாசமானது என்றும் கற்றுக் கொண்டோம். இவைகளை கற்றுகொண்டதானால் நாம் சட்டப்படி ஒரு சிறந்த குடிமகனாய் இருக்கிறோம். வெற்றிகரமான வாழ்க்கையை பெறுகிறோம். எனவே இவற்றை நாம் தலையாய விஷ்யங்களாக போற்றுகிறோம். ஓரினச் சேர்க்கை கூடாது என்று எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்று யோசித்தால் அதற்கு ஒரு சரியான காரணத்தை முன் வைக்க வேண்டும். இதன் பதில் கடைசியில் வருகிறது ;-)

2. அனுபவம் இருந்தால்தான் சொல்ல முடியும் என்று யாராவது சொன்னால் இதற்கு யாரும் பதில் சொல்லமுடியாது. நடப்பவைகளை கண்களை திறந்து பார்த்தால், இன்பம் விளைவது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இல்லையெனில் வேலை மெனக்கெட்டு ஒருவனோ இல்லை ஒருத்தியோ கஷ்டப்பட்டு (??) இதில் ஏன் ஈடுபடவேண்டும்.

3. எந்த புது விஷயமும் அல்லது வித்தியாசமான விஷயமும் முதலில் அங்கீகரத்தை பெறுவது என்பது இயல்பாய் நடப்பது இல்லை. கலிலியோ முதல் நம் சுதந்திரம் வரை அங்கீகாரம் என்பது எடுத்தவுடன் பெறப்பட்டதாய் நமக்கு காட்டவில்லை. சமுதாய அங்கீகாரம் வேண்டும் என்பது எத்தனை முக்கியமோ அதைவிட முக்கியம் சமூக மனிதாபிமானம் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது வேண்டும்.

4. நமது சட்டங்கள் யாவும் மத, மற்றும் இறை நம்பிக்கைகளின் ஊற்றுக் கால்களிலிருந்து வெளிவந்தவையே. எனவேதான் சட்டம் கீதையையும்.பைபிளையும் தினமும் உண்மையின் சாட்சியாக அழைத்துக்கொள்கிறது.ஒரு மதத்தில் பல திருமணம் முறையானதாகவும் இன்னொரு மதத்தில் அது சட்டத்துக்கு புறம்பானதாகவும் இருப்பதை சரியான உதாரணமாகக் கொள்ளலாம். அதாவது சட்டத்துக்கு இறைனம்பிக்கையை தாண்டிய அறிவு இல்லை.அல்லது சட்டம் இறையை தாண்டிப் பாயாது என்றும் சொல்லலாம்.இந்து மதத்தில் மனிவியிடம் பிள்ளைப் பேற்றுக்காக தவிர வேறு மற்ற எந்த காரணத்த்க்காகவும் உடலுறுவு வைத்து கொள்வது சட்டப்படி தவறு என்பதை சமிபத்தில் நண்பனிட்மிருந்து அறிந்து கொண்டேன். இந்த சட்டம் எங்கே? நமது நடைமுறை எங்கே?? நாம் சட்டப்படி ஏற்கனவே குற்றவாளிகள்தாம் என்பது நமக்கே தெரியும்.. யாரையும் கேட்கவேண்டியதில்லை. எனினும் நாம் எப்படி சரியானவர்கள் ஆகிறோம்? ஒரு திருமணத்திற்கு மேல் கூடாது என்கிற சட்ட எல்லையைத் தாண்டும் போது ஒரு இந்து சட்டப்படி குற்றவாளி ஆகிறான். ஆனால் ஒரு இசுலாமியருக்கு இச்சட்டம் பொருந்தாது.

எனவே ஓரினச்சேர்க்கையாளர்கள், இறைனம்பிக்கையின் அடிப்படையில் விளைந்த சட்டத்திடம் அங்க்கீகாரம் கேட்பது, மிகவும் தவறான இடத்தில் சென்று முறையிடுகிறார்கள் எனபதாகும். இறைவாதத்தில் எங்கிமே ஓரினச் சேர்க்கையானது ஊக்குவிக்கப்படவில்லை. இந்த காரணத்தைக் கொண்டுதான் ரூமி போன்றவர்கள் இது "இயற்கைக்கு மாறானது" என்கிற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் நடைமுறை பிரச்சினை இறைவாதத்தை பொருட்படுத்தவில்லை என்பதுதான் கண்கூடு.இறைவாதத்தை பொருட்படுத்தாதவர்களிடம் இறைவாத சட்டத்தை ஏற்கசொல்வது சரியானதல்ல. மாறாக அது இறைக்கு விளைக்கும் அவமானமே என்றாகிறது, எனது பார்வையில்.

னமது நோக்கில், இவர்கள் தவறு செய்வது போல் இருந்தாலும் அது தவறு அல்ல என்று பார்ப்பதே சரியானதாக இருக்க முடியும். அதாவது பைத்தியங்களின் பார்வையில் நாம் பைத்தியம் என்பது போல்(அப்பாடா இந்த உதாரணத்தை உபயோகப்படுத்த ஒரு இடம் கிடைத்தது). நாம் பைத்தியமாக ஆகாதவரையில் ஒரு சாதாரண மன நிலையிலிருப்பவரை "பைத்தியம்" என்று சொல்ல நமக்கு மனம் வராது.
நமது பார்வையில் இவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்கள். அவர்கள் பார்வையில் நாமும் அப்படியே என்பதை சிந்திக்க மறக்ககூடாது. இவர்களை அங்கீகரிக்காமல் இருப்பது ஒருவித ஆதிக்க மனப்பான்மையேதான்.

ஆனாலும் ஒரே ஒரு கேள்விக்கு ஓரினர்கள் பதில் சொல்ல முடியாது. "பிறவியிலிருந்தே இப்படி உணர்ந்தீர்களா" என்கிற கேள்விதான் அது. ஏனெனில் இவ்வாறு பிறவியிலேயே அவ்வாறு இருந்திருக்க சாத்தியமில்லை என்பது அறிவியற்பூர்வமாய் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாம். அப்படியே இருந்தாலும் அது சற்றும் பொருட்படுத்தக் கூடிய விகிதத்தில் இருக்காது.

அங்கீகாரம் கொடுத்தவுடன், ஓரினச் சேர்க்கையாளர்களும் போகிற வருகிறவர்களை வம்புக்கிழுக்காமல் இருக்குமாறும் சட்டம் இயற்றப்படவேண்டும். சரி சட்டப்படி அங்கீகாரம் பெற்றுவிட்ட நிலைமையை ஊதிப் பெருசாக்கி யோசிப்போம்.
பூங்காக்களிளும், வீதிகளிலும் ஓரினர்களின் சேஷ்டைகளை (??) பொறுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் உண்டாகும்.

குடும்பங்களில் இது என்ன விளைவை ஏற்படுத்தும்?

திருமணங்களின் மதிப்பு என்னவாகும்?

நமது பிள்ளைகளின் வளர்ச்சியில் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும்?

அமெரிக்காவில் குடியுரிமைச் சட்டமும் கேள்விக்குள்ளாக்கபடும். அதாவது ஏமாற்றுதல்களுக்கு எளிதில் இது வழிகோலும். உதாரணமாய், நான் மாசாசுசெட்ஸ் சென்று ஒருவருடன் தங்கி அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் , சட்டப்படி(by certificate of marriage) குடுயுரிமையை விண்ணப்பிக்கலாம். சட்டத்தை எதிர்த்து போராட்டம் கூட நடத்தலாம்.

மொத்தத்தில் ஒரு புதிய சமூகமுறையை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும். அதனால் ஏற்படும் அழிவுகளுக்கும் நாம் தயாராக வேண்டும். ஆனால் மனிதாபிமானப் பார்வை வேண்டும் என்பதில் எனக்கு சற்றும் தயக்கம் இல்லை.

Posted by: karthikramas
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-27-2005, 02:33 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:37 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:40 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:44 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 02:46 AM
[No subject] - by shiyam - 02-27-2005, 03:08 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 04:23 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 04:28 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 11:42 AM
[No subject] - by Mathan - 02-27-2005, 06:51 PM
[No subject] - by KULAKADDAN - 02-27-2005, 08:59 PM
[No subject] - by tamilini - 02-27-2005, 09:17 PM
[No subject] - by KULAKADDAN - 02-27-2005, 09:28 PM
[No subject] - by Mathan - 02-27-2005, 09:36 PM
[No subject] - by tamilini - 02-27-2005, 09:41 PM
[No subject] - by Mathan - 02-27-2005, 10:40 PM
[No subject] - by Mathan - 02-28-2005, 03:15 AM
[No subject] - by shobana - 03-01-2005, 07:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)