02-27-2005, 02:33 AM
இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஓரினச் சேர்க்கை என்பது ஒரு fashionable வி்ஷயமில்லை. இங்கே அம்மாதிரியானவர்களை சமூகம் வாரி அரவணைத்துக்கொள்கிறது என்றுமில்லை. இங்கேயும் பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் வித்தியாசமானவர்களாக இருப்பவர்கள் பகிடி செய்யப்படுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய அக்கா பெண் பேச்சு வாக்கில் அவளுடைய பள்ளிக்கூடத்தில் ஒரு பையன் கொஞ்சம் பெண் போல இருப்பதால் பகடி செய்வதாகப் பேச்சு வாக்கில் சொன்னாள். அவளிடம் பெரிய லெக்சர் எல்லாம் அடிக்காமல் இயன்ற அளவு பேசிப்புரிய வைக்க முயற்சித்தேன். இன்னுமொரு மனிதனின் உரிமையை இதுபோன்ற நடவடிக்கைகள் பாதிக்கின்றன என்று சொன்னேன். கறுப்புத் தோல் என்பதால் உன்னைப் பகடி செய்தால் எப்படியிருக்கும் என்றதும் அவளுக்குப் புரிந்துவிட்டது. தன் தோழதோழியர் இனிமேல் அப்படிச் செய்யாமலும் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தாள். அவள் மட்டுமல்ல, என்னுடைய வேறு சில நண்பர்களும் அப்படிப் பேசுகிறார்கள்தான். Girl friend தேவையில்லை. மருத்துவப் படிப்பு முடிந்ததும் பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்று முடிவெடுத்த ஒரு நண்பன் Gayஆக இருப்பானோ என்ற கிசுகிசு ஓடிக்கொண்டே இருக்கிறது. அது அவர்களுக்கு அநாவசியமானது என்று திட்டிக்கொண்டிருக்கிறேன்.
அதையேதான் நான் இங்கேயும் சொல்வேன். இது மற்றவர்களின் உரிமைக்குள் நம் மூக்கைத் திணிக்கும் வேலை.
என்னால் எப்படி இன்னொரு பெண்ணை முத்தமிடுவதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாதோ அப்படி ஒரு ஆணால் இன்னொரு ஆணை முத்தமிடுவதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது இல்லையா? இது ஒரு fashionableஆன வி்ஷயம் இல்லை என்றபோதும், சமூகம் வித்தியாசமாகப் பார்க்கும் என்றெல்லாம் இருந்தும் அதையும் மீறி இந்த வழியில் செலுத்துவது எது? இதுபோன்ற வி்ஷயங்கள் geneகளிலேயே இருக்கிறது என்ற வி்ஷயம் விஞ்ஞானக் கட்டுரைகளைப் படிக்கும்போதோ, விவரணப் படங்களைப் பார்க்கும்போதோ தெரிகிறது. இங்கேயிருக்கும் விஞ்ஞானிகள் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்(சுந்தரவடிவேல்?).
சமூகத்தின் கட்டுப்பாட்டுக்கஞ்சி வேறு பாலாரைத் திருமணம் செய்துகொண்டு அவதிப்படுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களே இம்மாதிரி நீங்கள் சொன்னபடி திருமணம் செய்து குழந்தைகுட்டி என்று பெற்றுக்கொண்டு பிறகு தங்களால் அப்படி இருக்கமுடியாது என்பதை பல வருடப்போராட்டங்களுக்குப் பிறகு உணர்ந்துகொள்கிறார்கள். சமீபத்தைய உதாரணம் நியூஜேர்சி ஆளுநர்.
நீங்கள் சொன்னபடி நெருங்கிய உறவினர் - சகோதரம், பிள்ளைகள் ஓரினப் புணர்ச்சியாளர் என்று வரும்போது அதிர்ச்சியாக இருக்கும். மனித மனம் இல்லையா? நம்மால் நம் பெற்றோர் எப்படி நம்மைப் பெற்றெடுத்தார்கள் என்பதையே யோசிக்க ஒரு மாதிரி இருக்கும். ஏதோ நாம்தான் ஆதாம்-ஏவாள் என்ற நினைப்பு எல்லோரிலும் இருக்கும். சகோதர சகோதரியரை நினைக்கவும் சங்கோஜமாக இருக்கும். நம்மூரில் இரு வேறு பாலார்கள் காதல் வயப்படுவதே பிரச்சனைக்குள்ள வி்ஷயமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர ஊருலகமெல்லாம் கூடிப்பேசி முடிவெடுக்கும் வி்ஷயமாக இருக்கிறது. அதற்குள் கண்டறியாத ஜாதி வேறு.
தம்மைப்பற்றிப் புரிந்துகொண்டு சமூகத்தில் யாருக்கும் பிரச்சினைகொடுக்காமல் முடிவெடுத்து ஒன்றாக இருக்க விரும்புவர்களை நாம் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும். ஒருவரின் படுக்கையறைவரை நாம் ஏன் நம் மூக்கை நுழைக்கவேண்டும்? இதுதான் என்னுடைய கேள்வி!
அப்படி யோசிப்பதற்கு நமக்கு நேரமும் பொழுதும் அக்கறையும் இருந்தால் உலகில் எத்தனையோ வி்ஷயங்கள் இருக்கின்றன.
வன்புணர்ச்சியால் அவதிப்படும் பெண்கள்.
அதைவிட வருத்தப்பட வைக்கும் வி்ஷயம் - வன்புணர்ச்சியால் அவதிபப்படும் குழந்தைகள் - ஆண்குழந்தை பெண்குழந்தை என்ற வித்தியாசம் இல்லாமல் அவதிப்படும் குழந்தைகள்.
இவர்களைப் பற்றி யோசிப்போமே!
அனாதரவாகப் போய் உலகிலேயே முதலாவது தொழில் என்று சொல்லும் விபச்சாரத்தில் விழும் பெண்களைக் காப்பாற்றுவோமே. விருப்பமில்லாமல் கடத்தப்பட்டு உழலும் பெண்களைக் காப்பாற்றலாமே. அவர்களைப்பற்றிக் குரல் கொடுக்கலாமே. வேறு வழியில்லாமல் விபச்சாரத்துக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கலாமே!
போர் என்று வந்துவிட்டால் அதில் முதலில் பலியாவது பெண்கள். Rwandaவில் நடந்த இனப்படுகொலை உங்களுக்குத் தெரியும். அங்கேயும் பெண்கள் வன்முறைக்கு ஆளானர்கள். அவர்கள் விரும்பி அந்தமாதிரி நடக்கவில்லை. ஆனால், பல உபத்திரவங்களுக்கு ஆளான பெண்கள் ஊர்திரும்ப அவர்களை அவர்கள் குடும்பங்களே சேர்த்துக்கொள்ளவில்லை. ஒரு சிலருக்கு குழந்தைகள்கூடப் பிறந்துள்ளன. அவையும் அனாதரவாக இருக்கின்றன. பல பெண்கள் அப்படியே பிரமை பிடித்தாற்போல இருக்கிறார்கள். திரும்ப வந்த மனைவியைச் சேர்ந்துக்கொண்ட ஒரு சில கணவர்களும் அண்டை அயலவர்களுக்குப் பயந்து மனைவியரைத் துரத்திவிடுகிறார்கள்.
இதற்கு ஒரு முடிவு காண உழைக்கலாமே.
இதையெல்லாம் விட்டுவிட்டு அடுத்தவர் வீட்டுப் படுக்கையறைக்குள் நமக்கென்ன வேலை?
-மதி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>