02-25-2005, 12:45 PM
கரியின் கருத்துக்கள் சரியானவைதான். ஆனால் இங்கு நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பயில்மொழி தாய் மொழியாக இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் இது மாறுபாடாக இருக்கிறது. அங்கு அடிப்படையில் தவறு இருப்பதாற்றான் முடிவுகளிலும் தவறு இருக்கிறது. கல்வியின் மொழிமூலம் எதுவோ அதுவே சிந்தனையின் மூலமாகவும் இருக்கும்.தமிழீழ மக்கள் தமிழில் பயில்கிறோம். தமிழில் சிந்திக்கிறோம். தமிழ் நாட்டுத் தமிழர்கள் ஆங்கிலத்தில் கற்பதினால் ஆங்கிலப் பாவனையை இயல்பானதாகக் கொள்கிறார்கள்.தவறு தனி மனிதர்களது அல்ல. அந்த நாட்டினுடையது. அங்கு கல்விச் சீரமைப்பு (மொழிரீதியில்) மிக அவசியமானது. ஆனால் அதில் அந்த நாட்டுத் தமிழ் அறிஞர்கள் தோற்றுப்போய் விட்டார்கள். அவர்களின் இரண்டாவது தொடக்கப்புள்ளிதான் தமிழ்ச் சினிமா. இதற்கு முன்னதாக அவர்கள் தொட்டிருக்க வேண்டிய இன்னொரு புள்ளி தமிழ்ப் பத்திரிகைகள். அண்மையில் விகடன் பத்திரிகை பற்றிய வாசகர் ஒருவரின் கருத்தினை படிக்கக் கிடைத்தது. தென் இந்தியப் பத்திரிகைகளில் அனேகமானவை ஆங்கிலச் சொற்களை அப்படியே மொழிமாற்றம் செய்கின்றன.இதனால் தமிழில் செய்திகளை வசிப்பவர்கள்கூட முழுமையாகத் தமிழில் எதையும் தெரிந்து கொள்வதில்லை. பத்திரிகைகளில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சித்திருந்தால் வர்த்தக நோக்கப் பாதிப்பின்றி இலகுவாக முன்னேறி அதன் பின்னர் சினிமா போன்ற வர்த்தகக் காரணிகளிற்கூடாக இலகுவாக மொழியினை வளப்படுத்தியிருக்கலாம் என்பது எனது கருத்து.
glad
glad

