08-25-2003, 07:09 PM
அன்பின் பரணி, மதிவதனன்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
இந்த மடல்களின் தொடரை
இணைத்ததற்கான நோக்கம், யாரையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது பழிவாங்கவோ அல்ல.
இதிலிருந்து கற்க வேண்டியதும்,எடுத்துக் கொள்ள வேண்டியதுமான பாடம் ஒன்று இருக்கிறது.
அதாவது எமக்கு இருக்கும் ஒரு பெரிய குறை எமது சினிமாவுக்காக ஒரு திறமையான நடிகையை தேர்வு செய்வது.
நான், எனது 13வது வயதில் இலங்கையின் சிங்கள சினிமாவில் ஒரு சிறுவனின் பாத்திரமேற்று நடிகனாக கலையுலகத்தில் நுழைந்தேன்.
அதற்கு காரணமானவர் எனது தந்தையின் நண்பரான இலங்கை திரைப்பட வரலாற்றின் முதலாவது தமிழ் திரைப்படத்தை உருவாக்கிய ஹென்றி சந்திரவங்ச அவர்கள்.
அதுவும் ஒரு விபத்தாகவே நடந்தது நான் பார்த்த படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகளை அப்படியே செய்து காட்டி அம்மாவின் அடி உதைக்கு ஆளாவேன்.
அம்மாவின் ஆதங்கமும், கோபமும் இவன் படிக்காமல் மனதை வேறெங்கோ செலுத்துகிறான் என்பது. ஒரு முறை என் குறும்புகளைப் பார்த்த ஹென்றி அங்கள், என்னிடம் படத்தில் நடிக்கிறாயா? என்று கேட்டார்.
அம்மா கேட்டால் கொண்டே போடுவார்கள் என்றேன்.
ஆனால் அவர் என்னை பாடசாலை ஓய்வு காலத்தில் அவரது "வனகத்த கெல்ல" (தமிழில் "சுமதி எங்கே" என்று பின்னர் மொழி மாற்றம் செய்யப் பட்டது.) படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்று ஒரு சிறு பகுதியில் நடிக்க வைத்தார்.
ஒரு வாரமாக நடித்தேன். ஆனால் படத்தில் நான் வந்ததென்னவோ 2 நிமிடத்துக்கும் குறைவுதான்.
என்னாலேயே என்னை சரியாக படத்தில் பார்த்துக் கொள்ள முடியவில்லை.
அப்போதெல்லாம் வீடியோ தொழில் நுட்பம் வளராத காலம். எனது நண்பர்களுடன் படம் பார்க்க போனால் " இந்த கொஞ்ச நேரத்துக்கா எங்களைக் கூட்டி வந்தாய், MGR போல படம் முழுக்க வர வேணும் " என்று கிண்டலடித்து, அடிபிடிப்பட்டது எவ்வளவு முட்டாள் தனம் என்று பின்னர்தான் விளங்கியது.
இத் தாக்கத்தின் காரணமாக திருட்டுத் தனமாக சினிமா - நாடக (சனி-ஞாயிறு) வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினேன்.
அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமா ஒன்றை உருவாக்குவதில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை நடிகைகளை தேடுவது.
இம் மடல் மூலம் நாம் பார்க்க வேண்டியது,
ஒரு ஆணுக்கே இப்படியென்றால் ?
பெண்கள் எப்படி வருவார்கள்? என்பதைத்தான்.
நாம் இப்படியே இருந்தால் எப்போது நமக்கென்று ஒரு சினிமாவை உருவாக்குவது?
நான் குறும்படங்கள் பகுதியில் எழுதினேன் யாரும் விரும்பினால் "குறும்பட பயிற்சிப் பட்டறை" ஒன்றை ஒழுங்கு செய்யுங்கள்.
வந்து தெரிந்ததை சொல்லித் தருகிறேன் என்று. எவருமே அதைப் பொருட்படுத்தவில்லை.
5 பேர் பயணம் செய்யும் காரை ஓட்டுவதற்கு சாரதி வகுப்புக்குப் போய் , எழுத்துப் பரீட்சை எழுதி சித்தியடைந்து, பின்னர் 20 முதல் 80 மணித்தியாலம் ஓடி சித்தியடைந்த பிறகுதான் காரையே ஓட்ட உங்களுக்கு அனுமதி கிடைக்கிறது:முடிகிறது.
கார் விபத்துக்குள்ளாகி செத்தால் 5 பேர்தான்.
ஆனால் ஒரு திரைப்படத்தை எடுக்க சினிமா பற்றிய அடிப்படை அறிவே இல்லாதவர்கள் இறங்குவதுதான் பெரும் ஆபத்து. இதனால் ஒரு சமுதாயமே விபத்துக்குள்ளாவதை எண்ணியவர்கள் எத்தனை பேர்?
இனி என்ன செய்யலாம் நீங்கள் கருத்துகளை முன் வைக்கலாம். முன் வைக்க வேண்டும்..............................
(X ன் மடலை தயவுடன் மறந்து விடுங்கள். அது நமக்கு கிடைத்த அன்பின் தீப்பொறி. அவருக்கு என் சிரம் தாழ் நன்றிகள்)
பணிவன்புடன்
உங்கள்
அஜீவன்