02-24-2005, 10:07 PM
வணக்கம் ராஜன் உங்கள் கருத்துக்களை கூறும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆனால் ஒரு களத்தை நடாத்துவதென்பது அசாதாரணமான விடயமல்ல. பொறுப்பாளர்கள் என் கருத்தில் கூட கை வைத்திருக்கின்றார்கள். நான் ஒன்றும் தரக்குறைவாக கருத்துக்கள் எழுதுபவன் அல்ல. சில பிரச்சினைகள் ஏற்படக்கூடாதென்பதற்காக அவர்கள் நீக்கும் போது அதை ஒன்றும் செய்ய முடியாது. அதை விட நீங்கள் எழுதிய மொத்தக் கருத்துக்களை நீங்களே மீண்டும் வாசித்துப் பாருங்கள். கூடுதலாக உங்கள் கருத்துக்கள் எவரையாவது தாக்கியே எழுதப் பட்டிருக்கும். தற்போது கூட களத்தில் எழுதுபவர்களை பொதுப் படையாகத் தாக்கியுள்ளீர்கள்.இது உங்களுக்கு நாகரீகமாகத் தெரிகிறதா? பொதுவாக வார்த்தைப் பிரயோகங்களில் கவனமாக இருக்க வேண்டும்.மற்றவர்களை கண்டிக்கும் நீங்கள் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தலாமா? எனவே தயவுசெய்து உங்கள் ஆதங்கங்களை நாகரீகமாக மற்றவர்களை தாக்காமல் முன் வையுங்கள். ஏற்றுக் கொள்வதும் விடுவதும் உங்கள் விருப்பம். :roll: 8) :roll: 8)

