02-23-2005, 07:41 PM
கிளாலி அருகே துப்பாக்கிச் சூடு. அரச சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று நம்பப்படுவதாக இலங்கை ராணுவம் தகவல்
இலங்கையின் வடக்கே கிளாலி பகுதியில் ராணுவக் காவலரணுக்கும் விடுதலைப் புலிகளின் காவலரணுக்கும் இடைப்பட்ட இடத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை உள்ளூர் நேரப்படி ஐந்தரை மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் இலங்கை அரச படையினர் இருவர் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டிருப்பதாக ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட பிரிகேடியர் தயா ரத்நாயக, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான படையினரில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுவதாகவும், மற்றவர் காயமடைந்திருப்பதாகவும் கூறினார்.
காயமடைந்த சிப்பாய் பலாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், உயிரிழந்ததாக நம்பப்படும் சிப்பாயுடைய உடலை ராணுவத்தினர் இன்னும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்க முடியவில்லை என்றும் ரத்நாயக தெரிவித்தார்.
இது ஒரு போர்நிறுத்த மீறல் சம்பவம் என்பதால் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளும்வரை தாங்கள் காத்திருக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னேரம் கிடைத்த தகவல்களின்படி போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சம்பவ இடத்தைச் சென்றடைந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
BBC தமிழோசை

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>