02-23-2005, 07:32 PM
27-ந்தேதி சுற்றுப்பயணம் தொடக்கம் - தேர்தலுக்கு தயாராகிறார் விஜயகாந்த் - "புரட்சி கலைஞர்" பெயரில் புதிய நகர்கள் திறக்கிறார்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/23/flash/C1144_Vijayakanth-2.jpg' border='0' alt='user posted image'>
விஜயகாந்த்
சென்னை பிப் 22- நடிகர் விஜயகாந்த் தன் ரசிகர்களை சந்திக்க 27-ந்தேதி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது புதிய நகர்களை திறந்து வைக்கிறார். இது தேர்தலுக்கான முன்னோட்டம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெற்றது. நடிகர் சங்க தேர்தல், சுனாமி போன்ற காரணங்களால் தனது அரசியல் பிரவேசம் பற்றி கருத்து சொல்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் இப்போது அரசியலில் நுழைவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தி உள்ளார். விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் தற்போது பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் அணி, மாணவர் அணி, மகளிர் அணி. வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, தொண்டர் அணி போன்றவைகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. உறுப்பினரானவர்களுக்கு உடனுக்குடன் விஜயகாந்த் கையெழுத்திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக தற்போது விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் விஜயகாந்திற்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ரசிகர் மன்றத்தினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். வருகிற 27-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை விஜயகாந்த் தொடங்குகிறார். இதற்காக சென்னையில் இருந்து புறப்படும் அவருக்கு வந்தவாசி, சேத்துப்பட்டு, ஆரடி, போரூர், கலசப்பாக்கம், உள்ளிட்ட பல இடங்களில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
அன்று மாலை 6 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள கீழ்நாச்சிப்பட்டி ஆறுமுக நகரில் பிரமாண்ட ரசிகர் மன்ற பொதுக்கூட்டம் நடக்கிறது. மன்ற பொதுச்செயலாளர் ராமு.வசந்தன் தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 15 லட்சம் பெறுமான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு 20 ஆயிரம் ரசிகர்களை திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதையடுத்து வருகிற மார்ச் 13-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் இதேபோன்று பிரமாண்ட வரவேற்புகளும் பொதுக்கூட்டமும் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவில், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் தலா 150 வீடுகள் கொண்ட புதிய நகரை விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் உருவாக்கி உள்ளனர். இதற்கு -புரட்சி கலைஞர் "விஜயகாந்த் நகர்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த நகரில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட இருக்கிறது. இதனை ஈரோட்டில் நடக்கும் விழாவில் விஜயகாந்த் வழங்குகிறார்.
இதனை தொடர்ந்து மார்ச் 30-ந்தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சட்டசபை தேர்தலுக்கு முன்பு அனைத்து மாட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்ய விஜயகாந்த் திட்டமி;ட்டுள்ளார். சுற்றுப்பயணத்தின்போது அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மன்றத்தின் நிலவரம், வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நடவடிக்கைகள் வருகிற சட்டசபை தேர்தலுக்கு விஜயகாந்த்தும் அவரது ரசிகர்களும் இப்போதே தயாராகி வருவதை காட்டுகிறது என்கின்றனர் தேர்தல் பார்வையாளர்கள்.
தினகரன்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>