Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வானம்பாடியின் திரை துளிகள்
#6
<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/23/others/C11_nagma.jpg' border='0' alt='user posted image'> நடிகைகள் மும்தாஜ்-நக்மா
சென்னை, பிப். 23- மும்பை தாதாவுடன் தொடர்புடையவர் ஒரே நக்மா தான். எந்த குழப்பமும் இல்லை. இதுகுறித்து போலீஸ் விசாரணைக்கும் தான் தயார் என்று நடிகை மும்தாஜ் உறுதியுடன் கூறியுள்ளார்.

மும்பை குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஜம்போ மும்பை போலீசிடம் சிக்கினான். அவன் தனது வாக்கு மூலத்தில் நடிகை நக்மாவுக்கு மும்பையில் உள்ள பந்த்ரா இல்லத்துக்கு சென்று அனீஸ் கொடுத்த ஹவாலா பணம் ரூ. 10 லட்சத்தை நக்மாவிடம் கொடுத்தேன் என்று குறிப்பி;ட்டிருந்தான். இதனை நடிகை நக்மா மறுத்ததுடன் தமிழில் நடித்து வரும் மும்தாஜ; பெயர்தான் நக்மா, தீவிரவாதிகள் அவரைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்றார்.

இதற்கு நடிகை மும்தாஜ; கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் -எனது நிஜப் பெயர் நக்மாகான். 1988ம் ஆண்டு நான் பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமி. பள்ளி சிறுமியை யாராவது தீவிரவாதிகளுடன் தொடர்பு படுத்துவார்களா? என்றார். மேலும் மும்தாஜின் தாயார் தபசுகான் கடந்த 2 வருடத்துக்கு முன்பு தாவூத் இப்ராகிம் வழக்கில் கைது செய்யப்பட்டார் தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார் என்றும் நடிகை நக்மா குறிப்பிட்டிருந்தார். அதற்கும் மும்தாஜ் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறம்போது, -எனது தாயார் பெயர் தபசுகான் இல்லை. ரூபினாகான் என்பதுதான் எனது தாயார் பெயர். அவர் தற்போது லண்டனில்தான் வசிக்கிறார். அவர் அங்கு அமைதியாக நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

மேலும் மும்தாஜ; கூறும்போது, -தீவிரவாதி பந்த்ரா வீட்டில்சந்தித்து 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறி உள்ளான். எனது வீடு பந்த்ராவில் கிடையவே கிடையாது. நான் மல்லாடு பகுதியில் வசித்தேன். இந்த இரண்டு ஊருக்கும் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். ஒரு சதவீதம் கூட உண்மை இல்லாத இந்த விஷயத்தில் எனது பெயரை வேண்டுமென்றே இழுக்கிறார்கள். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நக்மா யார் என்பதில் மும்பை போலீசார் குழப்பம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. அவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நக்மா யார் என்பதில் தெளிவாக உறுதியாக இருக்கிறார்கள். வட நாட்டு பத்திரிகைகள் கூட நக்மா யார் என்பதை தெளிவாக எழுதுகின்றன. சார்ஜாவில் நடந்த கிரிக்கெட் விளையாட்டின்போது அதனை பார்த்தவர் நக்மாதான் என்பது பத்திரிகைகளிலும், தொலைகாட்சியிலும் வெளியானது. அது ஒன்றே யாரை போலீசார் குறிப்பிடுகிறார்கள் என்பதற்கு சான்றாகும். இந்த விஷயத்தில் போலீஸ் விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.

தினகரன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
&quot;நக்மா என்றால் ஒரே நக்மாதான்&quot; ....... நடிகை மும்தாஜ் உறுதி - by Vaanampaadi - 02-23-2005, 11:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)