Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வானம்பாடியின் திரை துளிகள்
#5
இந்திய நடிகருக்கு முத்தம் கொடுத்த பாகிஸ்தான் நடிகைக்கு அபராதம்: முஷரப் அரசு நடவடிக்கை

இஸ்லாமாபாத், பிப். 23-

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை மீரா. இவர் நஜர் என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அஷ்மித் படேல் நடிக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த படத்துக்கான சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

படத்தில் அஷ்மித் படேலுடன் மிக நெருக்கமாக மீரா நடித்துள்ளார். சில காட்சிகளில் உணர்ச்சிமயமான முத்தங்களையும் மீரா கொடுத்துள்ளார். அந்த காட்சிகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.

இது பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய பழமைவாதி களுக்கும், தீவிரவாதிகளுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நடிகை, இந்திய நடிகருக்கு எப்படி முத்தம் கொடுக்கலாம்? என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் முதல் அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி அவர் மும்பை போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் இந்திய நடிகருக்கு முத்தம் கொடுத்ததற்காக மீரா மீது முஷரப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அங்குள்ள கலாச்சார அமைச்சகம் மீராவுக்கு கடுமையான அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அபராத தொகை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.

பாகிஸ்தான் நடிகர்களை மற்ற நாட்டுக்கு நல்லெண்ண தூதர்களாக அனுப்புவதை பாகிஸ்தான் வழக்கத்தில் வைத்துள்ளது. எனவே முத்தக் காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்திய படங்களில் பாகிஸ் தானியர்கள் நடிப்பதை தடை செய்யவும் முஷரப் அரசு பரிசீலித்து வருகிறது.

மாலைமலர்

படம் நீக்கப்பட்டுள்ளது -- யாழினி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இந்திய நடிகருக்கு முத்தம் கொடுத்த பாகிஸ்தான் நடிகைக்கு - by Vaanampaadi - 02-23-2005, 11:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)