02-23-2005, 11:02 AM
பிப்ரவரி 23, 2005
மைசூர் சிறையில் தமிழர்கள் சித்திரவதை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
டெல்லி:
மைசூர் சிறையில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள (வீரப்பனுடன் தொடர்புடையதாக புகார் கூறப்பட்டவர்கள்) 50 தமிழ்க் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழ் நாய்கள் என்ற அடைமொழியுடன் இவர்களை அழைக்கும் ஜெயிலர்கள் முறையாக உணவு கூட தராமல் தாக்கி வருகின்றனர். ஆண், பெண் கைதிகளின் செக்ஸ் உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது கொடுமைகளும் அரங்கேறி வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பல்வேறு புகார்கள் வந்தாலும் கர்நாடக அரசு, அந்த ஜெயிலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. இந்த விவரம் அரசல் புரசலாக தெரிய வந்தாலும் தமிழக அரசும் மௌனமே சாதித்து வருகிறது.
இந் நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகினார் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
அவர் அனுப்பிய புகாரில்,
மைசூர் சிறையில் உள்ள தமிழ்க் கைதிகளை கன்னட மொழி பேசும் ஜெயிலர்கள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். ஆனால் அந்த அதிகாரிகள் மீது இதுவரை சிறை நிர்வாகம் ஒரு நடவடிக்கை கூட எடுக்கவில்லை.
இந்த சித்திரவதை குறித்து நக்கீரன் உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் விரிவான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்க் கைதிகளை மிகக் கொடுமையாக தாக்குவதற்கு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. (கன்னட கைதிகளை விட்டுத் தாக்குவது).
எனவே தமிழர்களின் உயிரைக் காக்க மனித உரிமை ஆணையம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும். 50 பேரின் உயிர்களையும் மனித உரிமைகளையும் காக்க வேண்டும் என்று கோரியிருந்தார் ராதாகிருஷ்ணன்.
இந்த மனுவை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் இதுதொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>