08-24-2003, 09:35 PM
<span style='font-size:25pt;line-height:100%'>ஊடகஅறிக்கை </span> தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் இராமராஜ் தான்
சார்ந்துள்ள ENDLF எனப்படும் தமிழர் விரோத அமைப்பின் செயற்பாடுகளை
விஸ்தரிக்கவும் தமிழின விடுதலை போராட்டத்தை மழுங்கடிக்கும் நோக்கிலான அந்த அமைப்பின் பொய்யான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தை பயன்படுத்த முனைந்தமையை அடுத்து இந்த நடவடிக்கைகளால் அதிர்ப்தி அடைந்த நாம் இந்த நிறுவனத்தில் இருந்து விலகி உள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிhப்;பந்தம் காரணமாக நாம் வெளியேறியதாக பணிப்பாளர் இராமறாஜ் தினமுரசு பத்திரிகைக்கு தெரிவித்துள்ள கருத்தில் எதுவித உண்மையும் இல்லை என தெரிவித்து கொள்கின்றோம்.
தமிழ் மொழி மீதும் எமது பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் மீதும் நாம் கொண்ட மாறாத பாசம் மற்றும் கலை ஆர்வம் காரணமாகவே நாம் இந்த வானொலியின் ஒலிபரப்பாளர்களாய் சேவையாற்றினோம். அத்தோடு எந்த ஒரு தமிழ் அரசியல் குழுவினருடனோ அல்லது விடுதலை அமைப்பினருடனோ நாம் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என்பதோடு எவர்களுடைய ஆதரவாளர்களாகவோ அல்லது எதிரிகளாகவோ எம்மை நாம் இனம் காட்டிக்கொள்ளவில்லை எனவும் ஊடகவியலாளர்களாக ஊடகவியல் தர்மத்துடனேயே நாம் செயற்பட்டோம் என்பதனை இந்த வேளையில் குறிப்பிடுகின்றோம்.
எமது பணிக்காக நாம் எந்தவித கொடுப்பனவுகளையும் பெறவில்லை என்பதோடு புலம் பெயர்ந்த நம் உறவுகளை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களின் தனிமை நிலை போக்குவதோடு நமது மொழி புலத்திலும் நிலைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கோடு செயற்பட்டோம் நடுநிலையோடு பக்கச்சார்பற்ற முறையில் இந்த ஊடகம் செயலாற்றும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டபோதிலும் காலப் போக்கில் ENDLF மற்றும் ஏனையதமிழ் விரோத குழுக்களினதும் பிரச்சார ஊடகமாக இதனை மாற்றிவிட இராமறாஜ் முயன்றார்.தமிழ் மக்களின் உரிமைப்போரை அந்நிய சக்திகளுக்கு காட்டிக்கொடுத்து அதன் மூலம் சுகபோக வாழ்வை அனுபவிக்கும் தமிழின விரோத அமைப்பிற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் துணைபோக விரும்பாத தன்மானமுள்ள சுய அறிவாற்றல் உள்ள தமிழர்கள் என்றவகையில் எவரினதும் நிர்ப்பந்தம் இன்றி எமது சொந்த தன்மான உணர்ச்சியின் பால் உந்தப்பட்டு இந்த வானொலியில் இருந்து நாம் விலகி உள்ளோம்.
புலம் பெயர்ந்து வாழும் நம் தமிழ் உறவுகளிடம் வானொலிக்கென சேகரித்த பணத்தில் குடும்பத்துடன் உல்லாச சுற்றுலா புறப்பட்ட பணிப்பாளர் அந்தப்பணத்திலே தனது கட்ச்சிப்பணிகளை இலங்கையில் ஆரம்பித்து அதன் மூலம் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஊழியர்களையும் அதன் நேயர்களையும் தமது அமைப்பின் ஆதரவாளர்களாகவும் உறுப்பினர்களாகவும் இனம் காட்டி இந்திய உளவு அமைப்பிடமும் இலங்கை ஜனாதிபதியிடமும் பணம் பெற முனைந்தமையும் தற்போது எமக்கு தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த ஊடகத்துடனான சகல தொடர்புகளையும் எமது சுய அறிவும் சுய விருப்பின் அடிப்படையிலும் நாம் துண்டித்துள்ளோம் இதுவே எமது உண்மையான நிலைப்பாடாகும.;