Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்முகம் எங்கு தேடுவேன் - மீரா -
#1
காதலே காதலே என் தேசிய கீதமா?
காதலா காதலா - என்
காதல் உனக்கு சிலுவையா?

அன்னை மடி சுகத்தை நிதமும்
உன்னிடம் தேடித் தவித்தேன்
ஆதரவாய் உந்தன் தோளிலே
எந்தன் முகம் படர தவித்தேன்

கவிதையாய் நிறைத்த காதல்
காற்றிலே கலந்தது என்ன?
கடல் தாண்டியே கண்ணீரில் - நான்
வாழ்வதே தீர்வானதோ???

மனதும் மனதும் பேசிய காலம்
மௌனம் கூட அர்த்தமே
முகவரிகள் உறவெனவாக - உன்
காதல் சுயம் தான் தொலைந்ததே!

நீளமான இரவுகளில்
நீயில்லாத வெறுமை உணர்ந்தேன்
கண்ணீரெனும் தீர்த்தத்திலே -என்
காதல் துடுப்பில்லாப் படகாவதோ???

இறுகிப் போன உந்தன் மனதில்
என்முகம் எங்கு தேடுவேன்
இயந்திர வாழ்க்கை தன்னிலே - என்னை
நானும் தொலைத்து நிற்கிறேன்

திக்கு ஒன்றாய் சிதறிக் கசிந்த - எந்தன்
கவிதை உன்னைச் சேருமா
நாளையெந்தன் கல்லறை தனிலே
என் காதல் உனக்கென பூவாகுமோ.....?????????

- மீரா -
.
.!!
Reply


Messages In This Thread
என்முகம் எங்கு தேடுவேன் - மீரா - - by Thaya Jibbrahn - 02-22-2005, 08:15 PM
[No subject] - by tamilini - 02-22-2005, 08:44 PM
[No subject] - by வியாசன் - 02-22-2005, 09:48 PM
[No subject] - by kavithan - 02-22-2005, 11:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)