Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வானம்பாடியின் உலகம்
#13
ஈரானில் நிலநடுக்கத்தால் 400 பேர் பலி

ஈரானில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 400 பேர் வரை பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.

ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால், பல கிராமங்கள் அடியோடு தரைமட்டமாகியுள்ளன. இதுவரை 80 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பலியானோர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது. கெர்மன் மாநிலத்திற்கு 56 கிமீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

ஈரானின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலும் சுடு மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் தான் என்பதால் அவை சிறிய நிலஅதிர்வுகளையும் தாங்குவதில்லை. இதனால் நிலநடுக்கங்களால் ஏற்படும் உயிர்ச் சேதங்களின் அளவு இந்நாட்டில் அதிகமாகவே உள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு டிசம்பரி ஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 26,000 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது. ரிக்டர் கோலில் 6.6 என்ற அளவுக்கு அந்த நிலநடுக்கம் பதிவானது.

vanakkammalaysia
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-21-2005, 09:05 PM
[No subject] - by sinnappu - 02-22-2005, 12:16 AM
[No subject] - by kavithan - 02-22-2005, 01:24 AM
[No subject] - by Vaanampaadi - 02-22-2005, 11:45 AM
ஈரானில் நிலநடுக்கத்தால் 400 பேர் பலி - by Vaanampaadi - 02-22-2005, 12:37 PM
[No subject] - by kavithan - 02-22-2005, 10:42 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)