02-22-2005, 12:04 PM
இந்தூர், பிப். 22- பிரபல சினிமா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மத்திய பிரதேச அரசு லதா மங்கேஷ்கர் விருது வழங்குகிறது. அவருக்கு ரூ.1லட்சம் ரொக்க பரிசு கிடைக்கும்.
இந்தி சினிமா பின்னணி பாடகி லதாமங்கேஷ்கர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர். அதையொட்டி அவரது பெயரில் மத்திய பிரதேச அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.
மத்திய பிரதேச அரசின் கலாச்சார துறை உருவாக்கிய இந்த விருதுக்கு 2004-ஆம் ஆண்டில் சினிமா இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரூ.1லட்சம் ரொக்க பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும்.
இதற்கான விழா மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. அதில் கலந்துகொண்டு விருதை பெரும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடத்துவார்.
22-ந்தேதியில் இருந்தே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதில் பிரபல பின்னணி பாடகர், பாடகிகள் இசை விருந்து அளிப்பார்கள்.
மத்திய பிரதேச அரசு இந்தூர் ஸ்டேட்வங்கி, இந்தூர் வளர்ச்சி ஆணையம் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளன.
தினகரன்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>